விஜய்க்கு மகுடம் சூட்டும் கண்ணபிரான்-அமீர் பளிச்!
Tuesday, November 16, 2010
தலையைகூட மாற்றி சீவ மாட்டாரா? ரசிகர்களிடமிருந்து இப்படி ஒரு விமர்சனத்தையும் ஆதங்கத்தையும் நீண்ட நாட்களாகவே சந்தித்துவருகிறார் விஜய். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தயக்கத்தில் விஜய்யை இயக்கும் பல இயக்குனர்கள் அவருக்கு வேறொரு பரிமாணம் கொடுக்காமல் தள்ளியே நிற்கிறார்கள்.
ஆனால் இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட ரெடியாகிவிட்டார் அமீர். பருத்திவீரன் படத்திற்கு முன்பிலிருந்தே தனது “கண்ணபிரான்” கதை பற்றி பெருமையாக சொல்லிவருகிறார் அமீர். இந்த கதையை விஜய்க்கு சொல்லி ஓ.கேவும் வாங்கிவிட்டாராம். சமீபத்தில் முழு ஸ்கிரிப்டையும் கேட்ட விஜய், “அண்ணா…. நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்யுறேன். இந்த படத்திற்காக உங்ககிட்ட என்னை ஒப்படைத்து விடுகிறேன்” என சம்மதத்துடன் சத்தியத்தையும் கலந்து கொடுத்துள்ளாராம் விஜய்.
பருத்திவீரனில் ருசித்த மெகா வெற்றி, யோகியில் சந்தித்த படுதோல்வி என இரண்டு அனுபவங்களையும் பார்த்துவிட்ட அமீர், ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவானை பக்கா கமர்ஷியலாக இயக்கிவருகிறார். இந்த படம் முடிந்ததும் கண்ணபிரானுக்காக விஜய்யை களமிறக்க காத்திருக்கிறாராம்.
இது பற்றி அமீர் கூறியதாவது :
“விஜய்யை எல்லோரும் கமர்ஷியல் ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். அவார்டுகளை அள்ளி குவிக்கிற அளவிற்கு அழுத்தமான உழைப்பாளியும் அவருக்குள்ள இருக்கான். அந்த உழைப்பாளியின் படமா ‘கண்ணபிரான்’ அவருடைய உயரத்தை ஏற்றி வைக்கும்” என இளையதளபதிக்கு நற்சான்றிதழ் தருகிறார் அமீர்.
0 comments: