தொடர்ந்து 4 படங்களை ரீமேக்கும் விஜய்..
Tuesday, November 2, 2010
விஜயின் ‘காவலன்’ படப்பிடிப்பு முடிவடைந்து, தற்பொழுது பிர்புற தயாரிப்பு பணிகளுக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து புதுப்பட ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது விஜயின் பழக்கமாகும். ஒரு படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே ஒன்று அல்லது இரண்டு புதுப்படங்களுக்கு விஜய் ஒப்புக்கொண்டு விடுவார். ‘காவலன்’ படப்பிடிப்பு நடைபெற்ற போதே ‘வேலாயுதம்’ படத்தில் நடிக்க விஜய் ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டார். தற்பொழுது ‘காவலன்’ படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதால், ‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு, எந்த படத்தில் நடிப்பது என விஜய் சிந்தித்து வருகிறார்.
தெலுங்குப் படமான ‘பிருந்தாவனம்’ படத்தின் உரிமையை பெற விஜய் ஆவல் கொண்டிருப்பதாக நாம் கேள்வியுருகிறோம். எனவே ‘வேலாயுதம்’ படத்திற்குப் பிறகு ‘பிருந்தாவனம்’ படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய் நடிக்கக்கூடும் எனத் தெரிகிறது. ‘பிருந்தாவனம்’ படத்தில் ஜூனியர் NTR, சமந்தா, காஜல் அகர்வால், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தமிழில் மறுஉருவாக்கம் செய்யப்பட்ட எந்தவொரு தெலுங்குப் படமும் விஜயை இதுவரை கைவிட்டதில்லை. ஆனால் இம்முறை விஜய் தொடர்ச்சியாக மறு உருவாக்கப் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். ‘காவலன்’ மலையாளப் படமான ‘பாடிகார்ட்’ படத்தின் மறு உருவாக்கமாகும், அதே போல ‘வேலாயுதம்’ தெலுங்கின் வெற்றிப் படமான ‘ஆசாத்’ படத்தின் மறு உருவாக்கமாகும். ஷங்கர் இயக்கத்தில், விஜய் நடிக்க ’3 இடியட்ஸ்’ படமும் மறு உருவாக்கம் செய்யப்படுவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. இந்த ‘மறு உருவாக்கமயம்’ விஜய்க்கு வெற்றியை தேடித் தருமா? என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
0 comments: