விஜய்யின் வேலாயுதம்-குஷி்யில் ஜெனிலியா, ஹன்சிகா!
Tuesday, November 23, 2010
விஜய் நடிக்க பிரமாண்டமாக தயாராகிவரும் படம் “வேலாயுதம்”. ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். விஜய் பட வரலாற்றிலேயே மிகப் பிரமாண்டமானதாகவும், பெரிதாக பேசப்படும் அளவிலும் இப்படம் இருக்கும் என்கிறது படக்குழு. அந்த அளவுக்கு ரகளையாக தயாராகி வருகிறதாம் “வேலாயுதம்”.
படத்தை இயக்குவது ரீமேக் மன்னன் ஜெயம் ராஜா. இதனால் படத்தைப் பார்த்து பார்த்து இயக்கிக் கொண்டிருக்கிறார் ராஜா. அதை விட முக்கியமாக படத்தில் இரு நாயகிகள் வேறு. ஜெனிலியாவும், ஹன்சிகாவும் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார்களாம். இருவருக்குமே சம முக்கியத்துவம் வைத்து கேரக்டர்களை செதுக்கியுள்ளார் ராஜா. இதனால் இருவருமே திருப்தியுடன் பிரச்சினை பண்ணாமல் குஷி்யுடன் படு தோழமையாக நடித்து வருகிறார்களாம்.
இப்படம் விஜய்க்கு பெரும் பெயரை வாங்கித் தரும் என்று நம்பிக்கையுடன் கூறும் ஜெயம் ராஜா, கதை அந்த அளவுக்கு வலுவானது என்றும் தெரிவிக்கிறார்.
0 comments: