2011-கில்லியாக அசத்த தயாரான விஜய்!
Tuesday, November 23, 2010
இளைய தளபதி விஜய் தனது “காவலன்” படத்தை முடித்துவிட்டு, அடுத்த படமான வேலாயுதத்தில் மும்முரமகவும், வேகமாகவும் நடித்து வருகிறார். வேலாயுதத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் இன்று முதல் தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அங்கு பல முக்கிய காட்சிகள் படமாக்கப்படவுள்ளன.
இப்படப்பிடிப்புக்காக படத்தின் நாயகிகளான ஜெனிலியா, ஹன்சிகா மற்றும் படக்குழுவினர் பொள்ளாச்சிக்கு சென்றுள்ளனர். டிசம்பர் முதல் வாரத்தில் “3 இடியட்ஸ்” தமிழ் பதிப்பில் விஜய் நடிக்கத்தயாராவதால் “வேலாயுதம்” படத்தில் விஜய் சம்பந்தமான காட்சிகளை எடுப்பதில் முழுவீச்சில் இறங்கியுள்ளார் படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா.
இந்த ஆண்டு இறுதியில் “காவலன்” மற்றும் 2011-ம் ஆண்டு “வேலாயுதம்”, “3 இடியட்ஸ்” தமிழ் பதிப்பு, “பகலவன்” போன்ற படங்களால் விஜய்க்கு அடுத்த வருடம் சிறப்பானதாக அமையும் என்று கருதுகிறார்கள் திரைத்துறையினர். இதுமட்டுமில்லாமல் ஏ.எம்.ரத்னத்திற்காக விக்ரம்.கே.குமாருடன் படம், அமீருடன் “கண்ணபிரான்”, களவாணி சற்குணத்துடன் ஒரு படம் என பட்டியல் நீள்கிறது.
0 comments: