• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    என்கவுண்டருக்கு விஜய் ஆதரவு

    Saturday, November 13, 2010

    கொடூர கொலையாளி மோகனகிருஷ்ணன் கொல்லப்பட்டதை வரவேற்கிறேன். இது அவனுக்கு கடவுள் கொடுத்த தண்டனை என்று கூறியுள்ளார் நடிகர் விஜய்.

    இளம் சிறுமியைக் கற்பழித்தும், அவளது தம்பியை கொடூரமாக கிணற்றில் வீசியும் கொன்ற மோகனகிருஷ்ணனை உடனடியாக தூக்கில் போட வேண்டும் என ஆவேசப்பட்டிருந்தார் விஜய். இந்த நிலையில், மோகனகிருஷ்ணன் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். தமிழக மக்கள் அனைவரும் போலீசாரின் இந்த செயலுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    தமிழ் சினிமா நட்சத்திரங்களும் போலீசாருக்கு தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

    முன்னணி நடிகர் விஜய், இதுகுறித்துக் கூறுகையில், “கொலைகாரன் மோகனகிருஷ்ணனை தூக்கில் போட வேண்டும் என்று நான் கூறினேன். அதை கோபத்தில் கூறியிருந்தாலும், மனசார வேதனைப்பட்டுதான் சொன்னேன். ஆனால் நம் நாட்டு சட்டத்தில் அதற்கு இடமில்லை. அது எனக்கும் தெரியும். ஆனால் இப்போது நான் மிகுந்த சந்தோஷமடைந்துள்ளேன். இது அந்த கொடியவனுக்கு கடவுளே கொடுத்த தண்டனை என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்…”, என்றார்.

    0 comments:

    Post a Comment

    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog