காவலன் மேடையில் வித்தியாசாகருக்கு பாராட்டு விழா-விஜய்!
Tuesday, November 2, 2010
“விண்ணைத் தாண்டி வருவாயா” படத்தின் இசை வெளியீட்டு விழாவை லண்டனில் நடத்தினாலும் நடத்தினார்கள், அதன் பிறகு வெளிநாட்டில் இசை வெளியீடு என்னும் பித்து கோடம்பாக்கத்தைப் பிடித்து ஆட்டுகிறது. எந்திரன் , மன்மதன் அம்பு என்று சூப்பர் ஸ்டார்களின் படங்களுக்கு வெளிநாட்டுச் சந்தை இருப்பதால் அவர்கள் அங்கே இசையை வெளியிடுவதில் ஒரு அர்த்தம் இருகிறது. இதே டிரெண்டில் ஒச்சாயி படத்திற்கு ஆஸ்திரேலியாவில் இசை வெளியீடு என்று சின்ன பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்கூடக் கடல் கடந்த இசை வெளியீட்டில் காதலாகிப் பித்துப் பிடித்து அலைகிறார்கள்.
விஜய்யின் “காவலன்” படத்தின் வெளிநாட்டு உரிமையை 6 கோடிக்கு விற்ற வகையில் உற்சாகமாக இருக்கும் அந்தபடத்தின் தயாரிப்பாளர் சக்தி சிதம்பரம், “மன்மதன் அம்புக்கு முன்பு நாம் சிங்கப்பூரில் இசையை வெளியிட்டுவிடலாமா?” என்று விஜயிடம் கேட்க, “சாரி என்று மறுத்துவிட்டாராம் விஜய். இசை வெளியீட்டு விழாவைச் சென்னையிலேயே வைத்துக்கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம். இதனால் காவலன் இசை வெளியீட்டை சென்னையிலேயே நவம்பர் இரண்டாவது வாரம் வெளியிட இருக்கிறார்களாம்.
இந்த விழாவை வித்தியாசாகருக்கான ஒரு பாராட்டு விழாவாகவும் நடத்தலாம் என்று யோசனை நல்கியிருக்கிறார் விஜய். காரணம் வித்யாசாகருக்குக் “காவலன்” 245-வது படமாம்.
0 comments: