காவலன் ஒரு காதலின் தேடல்......
Friday, December 17, 2010
காவலன் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தளபதியின் விஸ்வருபம்.. தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் டிசம்பர் முதல் என்று அறிவித்தனர்.பின் பல சிக்கல்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பொங்கல் அன்று வர விருகிறது.. காவலன் இது விஜயின் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம் என்று அனைவருக்கும் அறிந்த விசயம்தான்.காவலன்., இன்றைய காதல் படங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....
காதலையும் நகைச்சுவையேயும் மையமாக கொண்டு ஒரு காதலனின் தேடல் தான் இந்த காவலன்.. ஒரு கசப்பான சூழலில் தன் காதலனை பிரியும் காதலியும்.,தன் உண்மையான காதலி இவள் தான் என்று தன் பிள்ளை மூலம் அறியும் காதலனும் எப்படி இணைகின்றனர் என்பதை அழுத்தமான திரைகதையுடன் வடிவமைதிருகிறார் இயக்குனர்.
இவர் இந்த கதைக்கு தேவையில்லை என்று யாரும் சொல்ல முடியாத வண்ணம் இதில் வரும் நாயகியின் தோழி முதல் அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தான். பொதுவாக விஜய் படம் என்றால் அவருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வில்லனை வேட்டையாட வைக்கும் இயக்குனர்கள் மத்தியில் சித்திக் மாறுபட்டு விஜய்க்கு ஒரு நல்ல படத்தை கொடுத்திருப்பார் என காவலன் பாடல்கள் நம்மை புரிய வைக்கின்றது.. காவலன் காதலின் தேடல் மட்டும் இல்லை, ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்ப்பும் கூட.. காத்திருப்போம் பொங்கல் வரை.. காவலன் கண்ணுக்கு தெரிந்த வெற்றி படம் என்பது 100% உண்மை.
அசத்துங்க பாஸ் !!!
0 comments: