• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    காவலனுக்காக அமெரிக்கா போன விஜய்!

    Friday, December 17, 2010

    காவலன் படத்தின் அறிமுகத்திற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் நடிகர் விஜய். இப்போது சான்பிரான்ஸிஸ்கோவின் பே ஏரியாவில் தங்கியுள்ள அவர், தனது ரசிகர்களைச் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் விஜய் - அசின் நடித்த காவலன் திரைக்கு வருகிறது. இந்தப்படம் அமெரிக்காவிலும் ரிலீசாகிறது. படம் குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விஜய்.

    தற்போது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவர், பே ஏரியாவில் வரும் டிசம்பர் 16-ம் தேதி இந்தியன் கல்ச்சுரல் சென்டரில் ரசிகர்களைச் சந்திக்கிறார். அங்கிருந்து கனடாவும் அவர் செல்லக்கூடும் என்று தெரிகிறது.


    இதற்கிடையே, தடையை மீறி இலங்கை போன அசினுடன் விஜய் ஜோடி போட்டுள்ளதைக் கண்டித்து அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

    0 comments:

    Post a Comment

    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog