விஜய்-உதயநிதி மோதல்
Friday, December 17, 2010
விஜய்யின் பரபரப்பு அரசியல் பிரவேச பேச்சுகளும், காவலன் ரிலீஸ் செய்திகளும் வெளிவரும் வேலையில் அதன் பின்புலனில் நடந்த விசயங்கள் வெளிவரத்துவங்கியுள்ளது.
சமீபத்திய தோல்விகளால் துவண்டிருக்கும் விஜய் தன் வெற்றிப்படிக்கட்டை ஆரம்பிக்க பெரிதும் நம்பி இருக்கும் படம் காவலன். ஏற்கனவே சன்பிச்சர்ஸ் வெளியிட்ட வேட்டைகாரன், சுறா இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததாலும், சன் பிச்சர்ஸுடன் இணக்கமான நிலை இல்லை என்பதாலும் விஜய் காவலனை சன் பிச்சர்ஸ்க்கு கொடுக்க கூடாது என்ற முடிவில்தான் படத்தையே ஆரம்பித்தார்கள்.
சித்திக்கின் வழக்கமான வேகத்தால் படம் முடிவடைந்து படத்தை ரெட்ஜெயண்டும், கிளவுட் நைன் இரண்டுமே கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் விஜயின் மாஸ் ஓபணிங்கை நம்பி பெரிய விலைக்க்கு வாங்கி ரிலீஸ் செய்ய திட்டமிட்டார் ஷக்தி சிதம்பரம். இதன் பின்புதான் விஜய்க்கு பிரச்சனைகளே ஆரம்பித்தது.
படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் அனைத்தும் சென்ற கட்டுரையில் சொன்னது போல் பெரியவர்களின் கையில் மாட்டிக்கொண்டதால் தியேட்டர் இல்லாமல் தவித்தது காவலன். இதற்கு உதவி கேட்க உதயநிதியை நாடி இருக்கிறார் விஜய். காவலன் ரிலீஸ் தேதியை ஒட்டியே உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு ரிலீஸும் முடிவு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. உதயநிதியிடம் காவலனுக்கு தியேட்டர் கேட்க… அவரோ 9 ஆம் தேதி காவலனை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள், ஆனால் எனக்கு 17 தேதி மன்மதன் அம்பு ரிலீஸ் ஆவதற்கு தியேட்டரை கொடுத்து விடுங்கள் என்று உதயநிதி கேட்டிருக்கிறார்.
உதயநிதியின் முதல் படம் குருவி, விஜய் என்ற மாஸுடன் தான் தன் தயாரிப்பு துறைக்கு பிள்ளையார் சுழி போட்டார் உதயநிதி. இதன் அடிப்படையில்தான் காவலனுக்கு உதயநிதியிடம் உதவி கேட்டிருக்கிறார் விஜய். ஆனால் உதயநிதியோ… ப்ரண்ட்ஷிப் வேற பிஸினஸ் வேற என்று பதில் சொல்லி விஜய்யை நோகடித்து பதில் சொல்லி இருக்கிறார். விஜய்க்கு காவலனை எளிதில் விட்டு விட முடியாது. காரணம் வரிசையாக 6 படங்கள் கொடுத்து ரசிகர்கள் துவண்டு போய் இருக்கிறார்கள். இனியும் தோல்வி கொடுத்தால் ஓபனிங்க் கிங் இடத்தை இழக்க வேண்டியதாக இருக்கும்.
அதனால் வேறு வழியில்லாமல் போயஸ்கார்டனுக்கு போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். விஜய் இதுவரை எப்போதுமே திமுக அனுதாபியாகவே முன்னிருத்தப்பட்டிக்கிறார். அஜித்தும் அதுபோல் அதிமுக அனுதாபிகவே பார்க்கப்பட்டார். விஜய் திமுக அனுதாபியாக இருந்தாலும் அவரின் தந்தை சந்திரசேகருக்கும் அதிமுகவுக்கு எப்போதும் சிக்கல் இல்லாத நட்பு இருந்து வருகிறது. அதனால் காவலனுக்கு ஆதரவு கேட்டு முதலில் சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து பிரச்சனையை எடுத்து சொல்லியதாக தெரிகிறது.
விஜய் நேற்று போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்திப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு நடந்த அரசியல் நிகழ்வுகள் இன்னும் திரைமறைவிலேயே இருக்கிறது. அடுத்த தேர்தலில் விஜய் தனித்து வருவாரா?? அதிமுகவுக்கு ஆதரவு தருவாரா? எல்லாமே பொருத்திருந்து பார்க்கவேண்டும். எப்படியோ போயஸும் விஜய்யும் நெருங்க ஆரம்பித்து விட்டது கண்கூடாகத் தெரிகிறது.
0 comments: