கைவிடப்படும் 3 இடியட்ஸ்?
Friday, December 17, 2010
3 இடியட்ஸ் ரீமேக் ஆரம்பம் முதல் கிசு கிசுக்கள் ,வதந்தி என பல வருகின்றன.எனினும் இப்போதைய நிலையை பார்த்தால் படம் கைவிடப்படும் என்றே தோன்றுகிறது அதுக்கு பல காரணங்கள் உண்டு.
முதலில் இதில் நடிப்பதில் உறுதியாக இருந்தவர் விஜய் இப்போது அவரை நீக்கிவிட்டதாகவே தெரிகிறது.
இதனால் விலக முற்பட்ட ஷங்கர் விஜய் இல்லாவிட்டால் இதை நான் இயக்கமாட்டேன் என தயாரிப்புக்குழுவிடம் சொல்ல அவர்கள் சூர்யாவை வைத்து ஷங்கரை திருப்தி செய்துள்ளனர்.
ஆனால் சூர்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளார் இதனால் தலைவலி போய் திருகுவலி வந்திருக்கிறது ஷங்கருக்கு. இரு கண்டிஷன்கள்தான் ஷங்கரை ஆடிப்போக வைத்ததாம். நம்பர் ஒன்- உடனே என்னால் கால்ஷீட் தர முடியாது. நம்பர் டூ- இந்த படத்தில் நான் நடிக்கணும் என்றால், தெலுங்கிலும் இந்த கேரக்டரை நானே செய்யணும் என்றாராம் சூர்யா.அங்குதான் ஜர்க் ஆகியிருக்கிறார் ஷங்கர். ஆந்திராவிலும் தன் சக்தியை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் சூர்யா (ஆசைய பாரு)
ஆனால் இந்த கேரக்டரில் மகேஷ்பாபு என்ற பெரிய ஹீரோவை நடிக்க வைக்க விரும்பி, பெரிய அட்வான்சையும் கொடுத்திருக்கிறது ஜெமினி லேப். இந்த நேரத்தில் மகேஷ்பாபு வேண்டாம் என்றால் கூட பரவாயில்லை. கொடுத்த அட்வான்சை எப்படி திருப்பி வாங்குவது?
இதனால் ஏதோ(??) காரணத்தால் கடைசி நேரத்தில் கையிலிருந்த விஜய்யை காவு கொடுத்துவிட்ட ஜெமினி லேப் இப்போது தலையில் கைவைத்து கொண்டு இருக்கிறது.
இது இப்படியிருக்க கைநிறைய சம்பளம், கணிசமான அட்வான்ஸ். சத்யராஜை சந்தோஷப்படுத்திய த்ரி இடியட்ஸ், அதே வேகத்தில் அவரை முடக்கியும் போட்டுவிட்டது. இந்த படத்திற்காக ஒதுக்கிய கால்ஷீட் தேதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்புவரை நிரப்பப்படாமல்தான் இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ்.
வீணாதானே போவுது, த்ரி இடியட்ஸ் துவங்குவதற்குள் வேறொரு படத்தில் நடித்துவிட்டு வந்திடலாமே என்று நினைத்தாராம். அந்த நேரம் பார்த்துதான் அழைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்கவிருந்த படத்திலிருந்து கடைசி நேரத்தில் கழன்று கொண்டார் அமீர். இவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்திலிருந்த எஸ்.ஏ.சி சத்யராஜிடம், உடனே ஷுட்டிங் போகணும். தேதி தர முடியுமா? என்றாராம்.
தானா ஊர்ற கேணிய மேலும் பத்தடி தோண்டுன மாதிரி, சும்மாயிருந்த சத்யராஜை சொடக்கு போடுற நேரத்தில் கமிட் பண்ணினாராம் எஸ்.ஏ.சி. சத்யராஜுக்கு ஏற்றது போல புரட்சி, போராட்டம் என்று கதையில் காரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் விஜய் இல்லாததாலும்,கால்சீட் வீனாகுவதாலும் இதில் தாம் விலகயிருப்பதாக ஜீவா நெருங்கியவர்களிடம் கூறி வருகிறார் என செய்திகள் கசிகின்றன
மேலும் இதில் இப்போது சூர்யா நடிப்பதாக உறுதி செய்தால் இப்போதைக்கு த்ரி இடியட்ஸ் தொடங்காது ஏனெனில் 7 ம் அறிவு முடிய ஐந்து மாதங்கள் இருப்பதே காரணம்.அது வரைக்கும் ஷங்கர் காத்திருப்பரா ?என்பது சந்தேகமே!!
இதில் விஜயை நீக்கியதக்கு காரணம் கால் சீட் பிரச்சனை என கூறிய தயாரிப்பு குழு இப்போது சூர்யாவுக்கும் அப்பிரச்சனை இருக்கிறது.இந்நிலையில் சூர்யாவை புக் பண்ணுமாயின் விஜயை நீக்கியதக்கு உண்மையான காரணத்தை(அதுதான் அரசியல் காரணம்) சொல்ல வேண்டிய நிலைக்கு ஜெமினி லாப் தள்ளப்படும்,மேலும் சூர்யாவின் நிபந்தனைகளை பூர்த்தியாக்குவதக்கு சாத்தியக்கூறு இல்லை.இதனால் சூர்யாவையும் நீக்கலாம்.இதன் மூலம் ஷங்கர் விலகும் வாய்ப்பும் மேலும் அதிகரிக்கும் ஆக மொத்தம் 3 இடியட்ஸ் கைவிடப்படும் என்பதுதான் இப்போதைய நிலை
0 comments: