கமல் 17-விஜய் 24!
Thursday, December 2, 2010
கமல்ஹாஸனின் “மன்மதன் அம்பு” திரைப்படம் வரும் டிசம்பர் 17-ம் தேதியும், விஜய்யின் “காவலன்” டிசம்பர் 24-ம் தேதியும் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. தமிழ் சினிமாவுக்கு 2010-ன் கடைசி மாதம் இது என்பதால், ஏற்கெனவே தயாராகி சென்சார் செய்யப்பட்டு பெட்டியில் தூங்கும் பல படங்கள் ரிலீசுக்குத் தயாராகி வருகின்றன.
இந்த ஒரு மாதத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட படங்கள் ரிலீசாக வேண்டும். இப்போதைக்கு 10 படங்களின் வெளியீட்டுத் தேதி உறுதியாகியுள்ளது.
கமல்ஹாஸனின் “மன்மதன் அம்பு”, விஜய்யின் “காவலன்”, சசிகுமாரின் “ஈஸன்” உள்ளிட்ட படங்கள் இந்த டிசம்பர் மாதமே வெளியாகவிருக்கின்றன. மன்மதன் அம்பு, ஈசன் ஆகிய படங்கள் டிசம்பர் 17-ம் தேதியும், விஜய்யின் காவலன் டிசம்பர் 24-ம் தேதியும் வெளியாகின்றன.
மேலும் டிசம்பர் 3-ம் தேதி சிக்குபுக்கு, தா, ரத்த சரித்திரம் படங்களும், டிசம்பர் 10-ம் தேதி விருதகிரி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, அய்யனார், சித்து ப்ளஸ்டூ போன்ற படங்களும், சினேகா ஆக்சன் அவதாரம் எடுத்துள்ள “பவானி” டிசம்பர் 24-ம் தேதியும் ரிலீசாகவிருக்கின்றன.
0 comments: