3 இடியட்ஸ் - விலகும் ஜீவா??
Friday, December 17, 2010
த்ரிஇடியட்ஸ் படம் தமிழில் எடுக்கப்படுவதாகச் சொன்ன நாளிலிருந்து அந்தப்படத்தைப் பற்றி விதவிதமான செய்திகள் வந்துகொண்டேயிருந்தன.
எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்ததுபோல படப்பிடிப்புக்குப் போகிற கடைசி நேரத்தில் விஜய்,படத்திலிருந்து விலக்கப்பட்டாரா? என்கிற விவாதங்கள் பெரிதாக நடந்துகொண்டிருக்கின்றன.இதற்கிடையில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் இயக்குநர் கேவிஆனந்த்.
ஏனெனில் அவர் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் கோ படத்தையடுத்து சூர்யாவை வைத்துத்தான் அடுத்த படத்தை இயக்கவிருந்தார்.இப்போது சூர்யா த்ரிஇடியட்ஸ் படத்தில் நடிக்கப் போய்விட்டால் இவர் படத்தில் நடிக்க ஆள் இல்லை என்பதே அதிர்ச்சிக்குக் காரணம்.இதில் இன்னொரு சுவாரசியமான செய்தியும் இருக்கிறது.விஜய் உடன் நடிக்க ஜீவாவும் ஸ்ரீகாந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.இவர்களில் கடைசியாக ஒப்பந்தம் ஆனவர் ஸ்ரீகாந்த்.
இவர் படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் கடும் வருத்தத்துக்கு ஆளாகிவிட்டாராம் ஜீவா.ஏனெனில் ஸ்ரீகாந்த் என்பவர் படவுலகில் அப்புறப்படுத்தப்பட்டவர்.அவருக்கு மறுபடி உயிர் கொடுக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர் செய்துவிட்டாரே என்பதுதான் ஜீவாவின் வருத்தத்துக்குக் காரணம்.அத்துடன் விஜய் என்ற பெரிய நடிகர் இதில் நடிப்பதாலும் தான் மூன்று ஹீரோ சப்ஜெக்ட்ல் நடிக்க ஒத்துக்கொண்டவர் ஜீவா.இதனால் படத்திலிருந்தே விலகிக் கொள்ள நினைப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் ஜீவா.
0 comments: