கவலையடையும் ஜீவா !
Friday, December 17, 2010
த்ரி இடியட்ஸ். விஜய் என்ற பெரிய ஹீரோ இதில் நடிக்கிறார் என்பதாலும், படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்பதாலும்தான் மூன்று ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கவே ஒப்புக் கொண்டார் ஜீவா.
ஆனால் அப்படத்தில் இருந்து வேறு காரணங்களால் விஜயை நீக்க மும்முரமாக வேலைகள் நடக்கின்றன.இதனால்கவலையடைகிறார் ஜீவா.
மேலும் ஜீவா ஹீரோவாக நடிக்கும் 'கோ' படத்தில் ஒரு பாடல் காட்சி இடம்பெறப் போகிறது.
அதில் தமிழின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வரியை திரையில் வந்து பாடிவிட்டு செல்வதாக காட்சி. கிட்டதட்ட ஒரு ஆல்பம் போலிருக்கும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
ஆனால் இந்த ஸ்டார் கேங்கிலிருந்து விஜய் தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியுள்ளார். இதனாலும் மேலும் கவலையடைகிறார்.
0 comments: