காவலன் பட மித்ராவுக்கு ஏமாற்றம் தந்தாராம் விஜய்
Friday, December 17, 2010
காவலன் படத்தில் விஜயுடன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் மித்ரா மலையாளத்திலும் இதே ரோலைத்தான் பண்ணியிருக்கிறார். தமிழ்ப்படத்தில் விஜயுடன் நடிப்பது குறித்து அவர் கூறும்போது, “நானே ஒரு விஜய் ஃபேன்தான்.
நான் படிக்கும் கல்லூரியில் நிறைய விஜய் ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் ரிலிஸ் ஆகும் அதே நேரம் கேரளாவிலும் விஜய் படங்கள் ரிலீஸ் ஆகுது. அப்படீன்னா விஜய் பவர் கேரளாவில் எப்படின்னு பார்த்துக்குங்க” என்று கூறினார். மேலும் கேரளாவில் சூட்டிங் நடந்தபோது விஜயைத் தனது வீட்டுக்கு விரும்பி அழைத்தாரம்.
ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் விஜய் வரவில்லையாம். எனினும் கவலைப்படாதீங்க மித்ரா. அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினாராம்.
0 comments: