3 இடியட்ஸ் விவகாரம்-சூர்யாவின் முகத்திரை கிழிந்தது
Friday, December 17, 2010
சூர்யாவால் தனக்கு இத்தனை நெருக்கடி வரும் என்று தெரிந்திருந்தால், டம்மி பீஸாக இருந்த அவரை ப்ரண்ட்ஸ், பெரியண்ணா போன்ற படங்களின் மூலம் கரையேற்ற முயற்சி செய்திருக்க மாட்டார்கள் விஜய்யும் அவர் தந்தை சந்திரசேகரனும்.
ஷங்கர் இயக்குவதாக கூறப்படும் 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் இப்போது நடிப்பவர் சூர்யா!இந்தப் படம் இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அமீர் கான் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது.
படப்பிடிப்புக்குக் கிளம்பிய நிலையில், படத்தின் தனது வேடத்துக்காக நிறைய கெட்டப் மாற்ற வேண்டிய நிலை இருந்ததால், அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகின.
இதற்கு விளக்கமளித்த விஜய், இந்தப் படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை படத்தின் தயாரிப்பாளர்தான் சொல்ல வேண்டும் என்றார். உண்மையில் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று விஜய் மறுக்கவில்லை என்றும். திட்டமிட்டு விஜய்யை கழற்றிவிட்டார்கள் என்றும் கூறுகிறது கோலிவுட்.
ரத்த சரித்திரம் மண்ணைக் கவ்விய நிலையில், வெயிட்டான ஒரு புராஜக்ட் கைவசம் இருப்பதுதான் தனக்கு நல்லது என சூர்யாவும் அவர் தந்தையும் உட்கார்ந்து பேசி, பக்கத்துவீட்டுக்காரரான ஷங்கருக்கு தூது போயுள்ளனர்.
அந்த நேரம் பார்த்து, விஜன் தனது கெட்டப் மாற்றம் குறித்து ஆயிரம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்துள்ளார். மேலும் முக்கிய இடத்தில் இருப்பவர்களும் இதில் விஜய் நடிப்பதை விரும்பவில்லையாம். படத்தின் தயாரிப்பாளர்களான ஜெமினி புரொடக்ஷன்ஸ் ஏற்கெனவே சன் பிக்ஸர்ஸ் மற்றும் ரெட் ஜெயன்டுடன் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கில் உள்ளது. எந்திரன், மன்மதன் அம்பு படங்களின் வெளியீட்டாளர் ஜெமினிதான்.
மேலும் அடுத்த சன் பிக்ஸர்ஸ், ரெட் ஜெயன்ட் படங்களின் ஹீரோ சூர்யாதான் என்பதையும் நினைவில் கொள்ளவும். ஏற்கெனவே தனக்குப் பிடிக்காத பிஆர்ஓவை, மற்ற கம்பெனிகளிலும் வேலை செய்ய விடாமல் தடுப்பதையே வேலையாகக் கொண்டு செயல்படுகிறார் சூர்யா என்கிறார்கள்.
இப்போது, 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும், இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்துப் பேசிய சூர்யா, “இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது.. இப்போது மீண்டும் என்னிடமே வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.
பூனைக்குட்டி எவ்வளவு நாள்தான் ஒளிந்திருக்க முடியும்… வெளியில் வந்துதானே ஆகணும் என்கிறார் விஜய் மன்ற நிர்வாகி ஒருவர்
இப்போது புரிகிறதா…சூர்யாவைப் பற்றி .
Nambavachu kaluthai arutha paavinga...Neenga vurupadave matteenga.