• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    Captain of Kollywood:Suriya or Vijay?

    Thursday, December 23, 2010

    Celebrity Cricket League T20 (CCLT20) will be held during the last week of January 2011. Actors from film industries like Bollywood, Tollywood, Sandalwood, and Kollywood have confirmed their participation in this cricket league, so far.

    There is a huge speculation on who would captain the Kollywood team and fingers point at Vijay or Suriya but it has not been finalized as yet. Further 24 probables have been selected thus far out of which 11 players will be chosen to play the match.

    According to Sarath Kumar, this cricket match will boost the ties between different film industries and act as bridge to develop friendship between the film industries.

    kaavalan latest trailer

    Kaavalan Trailer||Exclusive - 1st on NET||

    Friday, December 17, 2010

    Actor Vijay Speech in Bay Area (SFO) USA||Exclusive||

    ctor Vijay Speech in Bay Area (SFO) USA



    Actor Vijay Speech in Bay Area (SFO) USA

    Kaavalan in Aascar Ravichandran’s hands


    Good news for all Vijay’s fans out there! The distribution rights of Kaavalan for some important districts in Tamil Nadu have been handed over to Aascar Ravichandran. It may be recalled that producer Shakthi Chidambaram bagged the over-all distribution rights of this Vijay starrer earlier.

    With Aascar Ravichandran taking up this film under his wings, one can expect Kaavalan promos to reach the hilt. The producer is known for his marketing skills and will leave no stone unturned to make his project a success.

    Kaavalan stars Vijay and Asin in the main roles and is directed by Siddique. The film has been produced by Romesh Babu.

    Tantra Films Rejuvenates Kavalan!


    The much awaited answer to the question buzzing around the Indian cineworld is here! Both Ekaveera Creations & Cinema Paradise have resolved the recent disputes over the ownership of the worldwide distribution rights with Tantra Films.

    After much negotiation the producers of ‘Kavalan’ have produced the laboratory letter confirming Tantra Films as the sole rights owner for the Entire Overseas Territory. Hence, JK Saravana, the Chairman of Tantra Incorporated Pte Ltd (the parent company of Tantra Films), will be removing the High Court injunction Stay Order on the release on Monday. This amicable settlement reaffirms the release of the film during Pongal next year.

    JK Saravana also confirmed that Producer Romesh Babu of Ekaveera Creations, Sakthi Chidambaram of Cinema Paradise and he are working closely to promote and ensure Kavalan’s worldwide success as a Super Blockbuster!

    With that Tantra Films would like to announce the grand premiere of ‘Kavalan’ trailer in the United States, where Ilaya Thalapathi Vijay graces the musical ‘Vijay Unplugged’.

    Hummer Limo welcome for Vijay in the USA


    World Premiere launch of Vijay's upcoming Kaavalan trailer will be held in Bay Area, California, USA, today, Dec 16, 2010. This is the first time the trailer launch of a Tamil film is held outside India. Vijay will be present at the event in Bay Area, California and will be greeted with a 20 passenger Hummer Limo, arranged by his fans.

    Vijay is currently touring San Francisco and will also participate as the guest of honor in a meet and greet function at the India Community Center, Milpitas California today. Participate in this event by calling 408-905-6244 for more details.

    காவலன் ஒரு காதலின் தேடல்......


    காவலன் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் தளபதியின் விஸ்வருபம்.. தீபாவளிக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் டிசம்பர் முதல் என்று அறிவித்தனர்.பின் பல சிக்கல்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் பொங்கல் அன்று வர விருகிறது.. காவலன் இது விஜயின் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம் என்று அனைவருக்கும் அறிந்த விசயம்தான்.காவலன்., இன்றைய காதல் படங்களுக்கு ஒரு முன்னோடியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை....

    காதலையும் நகைச்சுவையேயும் மையமாக கொண்டு ஒரு காதலனின் தேடல் தான் இந்த காவலன்.. ஒரு கசப்பான சூழலில் தன் காதலனை பிரியும் காதலியும்.,தன் உண்மையான காதலி இவள் தான் என்று தன் பிள்ளை மூலம் அறியும் காதலனும் எப்படி இணைகின்றனர் என்பதை அழுத்தமான திரைகதையுடன் வடிவமைதிருகிறார் இயக்குனர்.


    இவர் இந்த கதைக்கு தேவையில்லை என்று யாரும் சொல்ல முடியாத வண்ணம் இதில் வரும் நாயகியின் தோழி முதல் அனைவருக்கும் அழுத்தமான கதாபாத்திரம் தான். பொதுவாக விஜய் படம் என்றால் அவருக்கு மட்டும் முன்னுரிமை கொடுத்து வில்லனை வேட்டையாட வைக்கும் இயக்குனர்கள் மத்தியில் சித்திக் மாறுபட்டு விஜய்க்கு ஒரு நல்ல படத்தை கொடுத்திருப்பார் என காவலன் பாடல்கள் நம்மை புரிய வைக்கின்றது.. காவலன் காதலின் தேடல் மட்டும் இல்லை, ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்ப்பும் கூட.. காத்திருப்போம் பொங்கல் வரை.. காவலன் கண்ணுக்கு தெரிந்த வெற்றி படம் என்பது 100% உண்மை.

    அசத்துங்க பாஸ் !!!

    குமுதம் வார இதழில் இளையதளபதி

    இவ்வார குமுதம் இதழில் விஜயின் நேர்காணல் பிரசுரிக்கப்பட்டது.அதில் இளையதளபதி காவலன் படம் பற்றி மனம் திறக்கிறார்.காவலனில் தனக்கு பிடித்த விடயங்கள் பற்றியும் கூறுகிறார்.

    அத்துடன் அவரின் இப்போதைய ஸ்டைல்,மற்றும்,ஏனைய கேள்விகளுக்கும் அதிரடியாக பதில் அளிக்கிறார். மேலும் தன்னை பற்றி இ-மெயில்,எஸ் எம் எஸ் கமென்ட் பற்றி அவர் என்ன கருதுகிறார் என்பதையும் அரசியலுக்கு வருவது குறித்தும் விளக்கம் அளிக்கிறார்.

    அந்த நேர்காணல் பிரசுரிக்க பட்ட குமுதம் வார இதழ் பக்கங்கள் கீழே




    கைவிடப்படும் 3 இடியட்ஸ்?


    3 இடியட்ஸ் ரீமேக் ஆரம்பம் முதல் கிசு கிசுக்கள் ,வதந்தி என பல வருகின்றன.எனினும் இப்போதைய நிலையை பார்த்தால் படம் கைவிடப்படும் என்றே தோன்றுகிறது அதுக்கு பல காரணங்கள் உண்டு.

    முதலில் இதில் நடிப்பதில் உறுதியாக இருந்தவர் விஜய் இப்போது அவரை நீக்கிவிட்டதாகவே தெரிகிறது.
    இதனால் விலக முற்பட்ட ஷங்கர் விஜய் இல்லாவிட்டால் இதை நான் இயக்கமாட்டேன் என தயாரிப்புக்குழுவிடம் சொல்ல அவர்கள் சூர்யாவை வைத்து ஷங்கரை திருப்தி செய்துள்ளனர்.

    ஆனால் சூர்யா சில நிபந்தனைகளை விதித்துள்ளார் இதனால் தலைவலி போய் திருகுவலி வந்திருக்கிறது ஷங்கருக்கு. இரு கண்டிஷன்கள்தான் ஷங்கரை ஆடிப்போக வைத்ததாம். நம்பர் ஒன்- உடனே என்னால் கால்ஷீட் தர முடியாது. நம்பர் டூ- இந்த படத்தில் நான் நடிக்கணும் என்றால், தெலுங்கிலும் இந்த கேரக்டரை நானே செய்யணும் என்றாராம் சூர்யா.அங்குதான் ஜர்க் ஆகியிருக்கிறார் ஷங்கர். ஆந்திராவிலும் தன் சக்தியை காட்ட வேண்டும் என்று நினைக்கிறார் சூர்யா (ஆசைய பாரு)

    ஆனால் இந்த கேரக்டரில் மகேஷ்பாபு என்ற பெரிய ஹீரோவை நடிக்க வைக்க விரும்பி, பெரிய அட்வான்சையும் கொடுத்திருக்கிறது ஜெமினி லேப். இந்த நேரத்தில் மகேஷ்பாபு வேண்டாம் என்றால் கூட பரவாயில்லை. கொடுத்த அட்வான்சை எப்படி திருப்பி வாங்குவது?

    இதனால் ஏதோ(??) காரணத்தால் கடைசி நேரத்தில் கையிலிருந்த விஜய்யை காவு கொடுத்துவிட்ட ஜெமினி லேப் இப்போது தலையில் கைவைத்து கொண்டு இருக்கிறது.

    இது இப்படியிருக்க கைநிறைய சம்பளம், கணிசமான அட்வான்ஸ். சத்யராஜை சந்தோஷப்படுத்திய த்ரி இடியட்ஸ், அதே வேகத்தில் அவரை முடக்கியும் போட்டுவிட்டது. இந்த படத்திற்காக ஒதுக்கிய கால்ஷீட் தேதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்புவரை நிரப்பப்படாமல்தான் இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ்.

    வீணாதானே போவுது, த்ரி இடியட்ஸ் துவங்குவதற்குள் வேறொரு படத்தில் நடித்துவிட்டு வந்திடலாமே என்று நினைத்தாராம். அந்த நேரம் பார்த்துதான் அழைத்தார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் இயக்கவிருந்த படத்திலிருந்து கடைசி நேரத்தில் கழன்று கொண்டார் அமீர். இவருக்கு பதிலாக யாரை நடிக்க வைப்பது என்ற குழப்பத்திலிருந்த எஸ்.ஏ.சி சத்யராஜிடம், உடனே ஷுட்டிங் போகணும். தேதி தர முடியுமா? என்றாராம்.


    தானா ஊர்ற கேணிய மேலும் பத்தடி தோண்டுன மாதிரி, சும்மாயிருந்த சத்யராஜை சொடக்கு போடுற நேரத்தில் கமிட் பண்ணினாராம் எஸ்.ஏ.சி. சத்யராஜுக்கு ஏற்றது போல புரட்சி, போராட்டம் என்று கதையில் காரமும் சேர்க்கப்பட்டிருக்கிறது.
    அத்துடன் விஜய் இல்லாததாலும்,கால்சீட் வீனாகுவதாலும் இதில் தாம் விலகயிருப்பதாக ஜீவா நெருங்கியவர்களிடம் கூறி வருகிறார் என செய்திகள் கசிகின்றன

    மேலும் இதில் இப்போது சூர்யா நடிப்பதாக உறுதி செய்தால் இப்போதைக்கு த்ரி இடியட்ஸ் தொடங்காது ஏனெனில் 7 ம் அறிவு முடிய ஐந்து மாதங்கள் இருப்பதே காரணம்.அது வரைக்கும் ஷங்கர் காத்திருப்பரா ?என்பது சந்தேகமே!!


    இதில் விஜயை நீக்கியதக்கு காரணம் கால் சீட் பிரச்சனை என கூறிய தயாரிப்பு குழு இப்போது சூர்யாவுக்கும் அப்பிரச்சனை இருக்கிறது.இந்நிலையில் சூர்யாவை புக் பண்ணுமாயின் விஜயை நீக்கியதக்கு உண்மையான காரணத்தை(அதுதான் அரசியல் காரணம்) சொல்ல வேண்டிய நிலைக்கு ஜெமினி லாப் தள்ளப்படும்,மேலும் சூர்யாவின் நிபந்தனைகளை பூர்த்தியாக்குவதக்கு சாத்தியக்கூறு இல்லை.இதனால் சூர்யாவையும் நீக்கலாம்.இதன் மூலம் ஷங்கர் விலகும் வாய்ப்பும் மேலும் அதிகரிக்கும் ஆக மொத்தம் 3 இடியட்ஸ் கைவிடப்படும் என்பதுதான் இப்போதைய நிலை

    3 இடியட்ஸ் - விலகும் ஜீவா??


    த்ரிஇடியட்ஸ் படம் தமிழில் எடுக்கப்படுவதாகச் சொன்ன நாளிலிருந்து அந்தப்படத்தைப் பற்றி விதவிதமான செய்திகள் வந்துகொண்டேயிருந்தன.

    எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்ததுபோல படப்பிடிப்புக்குப் போகிற கடைசி நேரத்தில் விஜய்,படத்திலிருந்து விலக்கப்பட்டாரா? என்கிற விவாதங்கள் பெரிதாக நடந்துகொண்டிருக்கின்றன.இதற்கிடையில் விஜய்க்குப் பதிலாக சூர்யா நடிக்கப் போகிறார் என்று செய்திகள் வந்துகொண்டிருப்பதால் அதிர்ச்சியில் இருக்கிறாராம் இயக்குநர் கேவிஆனந்த்.

    ஏனெனில் அவர் தற்போது இயக்கிக்கொண்டிருக்கும் கோ படத்தையடுத்து சூர்யாவை வைத்துத்தான் அடுத்த படத்தை இயக்கவிருந்தார்.இப்போது சூர்யா த்ரிஇடியட்ஸ் படத்தில் நடிக்கப் போய்விட்டால் இவர் படத்தில் நடிக்க ஆள் இல்லை என்பதே அதிர்ச்சிக்குக் காரணம்.இதில் இன்னொரு சுவாரசியமான செய்தியும் இருக்கிறது.விஜய் உடன் நடிக்க ஜீவாவும் ஸ்ரீகாந்தும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கின்றனர்.இவர்களில் கடைசியாக ஒப்பந்தம் ஆனவர் ஸ்ரீகாந்த்.

    இவர் படத்தில் நடிக்கிறார் என்று தெரிந்ததும் கடும் வருத்தத்துக்கு ஆளாகிவிட்டாராம் ஜீவா.ஏனெனில் ஸ்ரீகாந்த் என்பவர் படவுலகில் அப்புறப்படுத்தப்பட்டவர்.அவருக்கு மறுபடி உயிர் கொடுக்கும் விதமாக இயக்குநர் ஷங்கர் செய்துவிட்டாரே என்பதுதான் ஜீவாவின் வருத்தத்துக்குக் காரணம்.அத்துடன் விஜய் என்ற பெரிய நடிகர் இதில் நடிப்பதாலும் தான் மூன்று ஹீரோ சப்ஜெக்ட்ல் நடிக்க ஒத்துக்கொண்டவர் ஜீவா.இதனால் படத்திலிருந்தே விலகிக் கொள்ள நினைப்பதாக தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறாராம் ஜீவா.

    கவலையடையும் ஜீவா !


    த்ரி இடியட்ஸ். விஜய் என்ற பெரிய ஹீரோ இதில் நடிக்கிறார் என்பதாலும், படத்தை ஷங்கர் இயக்கப் போகிறார் என்பதாலும்தான் மூன்று ஹீரோ சப்ஜெக்ட்டில் நடிக்கவே ஒப்புக் கொண்டார் ஜீவா.
    ஆனால் அப்படத்தில் இருந்து வேறு காரணங்களால் விஜயை நீக்க மும்முரமாக வேலைகள் நடக்கின்றன.இதனால்கவலையடைகிறார் ஜீவா.
    மேலும் ஜீவா ஹீரோவாக நடிக்கும் 'கோ' படத்தில் ஒரு பாடல் காட்சி இடம்பெறப் போகிறது.
    அதில் தமிழின் முன்னணி நடிகர்கள் அத்தனை பேரும் ஒவ்வொரு வரியை திரையில் வந்து பாடிவிட்டு செல்வதாக காட்சி. கிட்டதட்ட ஒரு ஆல்பம் போலிருக்கும் இந்த பாடல் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று கனவு கண்டு கொண்டிருந்தார் படத்தின் இயக்குனர் கே.வி.ஆனந்த்.
    ஆனால் இந்த ஸ்டார் கேங்கிலிருந்து விஜய் தவிர்க்க முடியாத காரணங்களால் விலகியுள்ளார். இதனாலும் மேலும் கவலையடைகிறார்.

    விஜய்க்கு துரோகம் செய்யும் சூர்யா !!!


    விஜய் அப்போது பத்து படங்கள் நடித்த நடிகர். சூர்யா அதுவரை எந்த படத்திலும் நடித்ததில்லை. வசந்த் இயக்கத்தில் 1997ம் ஆண்டில் வெளிவந்த நேருக்கு நேர் படத்தில் சூர்யா என்ற புதுமுக நடிகருடன் நடிக்க விஜய் எந்த தயக்கமும் காட்டவில்லை.
    அதில் விஜய் என்ற முன்னணி நடிகர் சூர்யா என்ற புதுமுக நடிகருடன் இரண்டு ஹீரோ சப்ஜக்டில் நடித்தது பல புருவங்களை உயர்த்தியது. ஆனாலும் விஜய் அதில் நடிக்க காரணம் சூர்யா தன் லயோலா கல்லூரி நண்பன் என்பதாலேயே ! அந்த படத்தில் வசந்தும் தன் பங்கிற்கு விளையாடினார்.
    ஹிட்டான பாடல்களை சூர்யாவுக்கு தந்து சிம்ரனை சூர்யாவுக்கு ஜோடியாக போட்டு நல்ல நல்ல சீன்களை சூர்யாவுக்கு ஒதுக்கி… இப்படி பல விஷயங்கள் அந்தப் படத்தில் விஜய்க்கு எதிராகவே நடந்தன. ஆனாலும் விஜய் அதில் நட்புக்காக நடித்தார்….



    காலங்கள் ஓடின…நான்கு வருடங்கள் கழித்து விஜய் லவ் டுடே, காதலுக்கு மரியாதை, போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்த , தனியாக ஹிட் கொடுக்க முடிகிற ஸ்டார்…சூர்யாவோ திரையுலகில் நான்கு வருடங்கள் இருந்தும் கூட ஹிட் கொடுக்க முடியாமல திணறிக் கொண்டிருந்தார்… அவர் கேரியரே முடிவுக்கு வந்து விடுமோ என்ற நிலையில் அவருக்கு ஒரு மாஸ் படம் தேவைப்பட்டது. அப்போது தான் ஃப்ரண்ட்ஸ் படம் ப்ளான் செய்யப்பட்டது. அதில் விஜய்க்கு செக்ண்ட் ஹீரோவாகும் வாய்ப்பு சூர்யாவுக்கு கிடைத்தது. விஜய் நினைத்திருந்தால் சூர்யாவை புக் செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கலாம். தயாரிப்பாளர் கேட்டிருப்பார். ஆனால் நேருக்கு நேர் ஏற்படுத்திய கசப்பான அனுபவத்திற்குப் பிறகும் விஜய் மீண்டும் சூர்யாவுடன் இணைந்து நடித்தார். நட்புக்காக…



    விஜய் டிவி அவார்ட்ஸ் வருடா வருடம் நடக்கும் கோலிவுட் கொண்டாட்டம்… இதில் விஜய்க்கு “பாப்புலர் ஆக்டர்” என்ற அவார்ட் கொடுத்தார்கள்… ஆனால் அந்த அவார்டை விஜய்க்கு தந்தது சூர்யா… இரண்டு பேரும் சம்கால நடிகர்கள்… இருவரில் சீனியர் விஜய்… விஜய்க்கு கமல் கையாலோ ரஜினி கையாலோ அவார்ட் கொடுத்தால் அது நியாயம்… ஏன் விகரம் கையால் கூட கொடுத்திருக்கலாம் … அவர் சீனியர்… ஆனால் விஜயை விட ஜூனியரான சூர்யாவின் கையால் விஜய்க்கு அவார்ட்! விஜய் நினைத்திருந்தால் அதை தவிர்த்திருக்கலாம்… அவமானம் என்று விலகியிருக்கலாம்.. ஆனால் விஜய் அந்த அவார்டை ஏறுக் கொண்டார்..... நட்புக்காக…தனது பெருந்தன்மைக்காக.....


    தற்போது அரசியல்காரணங்களுக்காக பல்வேறு போர்வையில் விஜயை த்ரீ இடியட்ஸ் படத்திலிருந்து நீக்குவதக்கு பிளான் போடுகிறார்கள் ….ஆம் விஜய் விலகியதாக வெளியான வதந்தியில் விஜய் தனது ஹேர் ஸ்டைலை மாற்ற மறுத்ததாக கூறுவது பொய்யான தகவலாகும் அவர் 3 இடியட்ஸ் படத்தில் அமீரின் ஹேர் ஸ்டைல் போன்று ஓட்ட வெட்டியிருந்தார்.இவ்வாறு ஆவலுடன் காத்திருந்த விஜயை நீக்க சதி நடப்பதே இப்போதைய செய்தி.அந்த படத்தில் விஜயின் ரோலை ஏற்பதற்கு சூர்யா முண்டியடிக்கிறார்.… ஷங்கர் விஜய்க்கு நிகரான கதாநாயகன் கிடைக்கவில்லையெனில் நான் விலகுகிறேன் என்றார்…

    இவ்வாறு விஜய் இல்லாவிட்டால் ஷங்கர் விலகுவதாக கூறியதால் தயாரிப்பு நிர்வாகம் அந்த அரசியல் கட்சியின் மிரட்டலை புறக்கணித்து விஜயை த்ரீ இடியட்ஸீல் நீக்க வேண்டாம் என இருந்த நிலையில் சூர்யா இந்தப் படத்தில் நடிக்க முண்டியடிப்பதன் மூலம் தயாரிப்பு நிர்வாகம் ஷங்கரை திருப்தி செய்யலாம் என இருக்கிறதாம்.இதனால் சூர்யா விஜய்க்கு எதிராக ஒரு அடி எடுத்து வைத்திருக்கிறார். சூர்யாவுக்கு என வாய்ப்புக்கள் இல்லையா ? கௌதம், முருகதாஸ் என்று பலர் சூர்யாவுக்காக காத்திருக்கிறார்கள். அவர் நினைத்திருந்தால் நண்பனுக்காக இந்த வாய்ப்பை நிராகரித்திருக்கலாம்.. ஆனால் சூர்யா அப்படி செய்யவில்லை….

    பெருந்தன்மையும் விட்டுகொடுக்கும் மனப்பாங்கு உள்ள நமது விஜய்யிடம் இப்படி தட்டிப்பறிப்பது சரியா சூர்யா?

    நன்றி:மூன்றாம் கோணம்
    உங்கள் கருத்துக்களை எதிர்பார்த்து: SuJeE

    3 இடியட்ஸ் விவகாரம்-சூர்யாவின் முகத்திரை கிழிந்தது


    சூர்யாவால் தனக்கு இத்தனை நெருக்கடி வரும் என்று தெரிந்திருந்தால், டம்மி பீஸாக இருந்த அவரை ப்ரண்ட்ஸ், பெரியண்ணா போன்ற படங்களின் மூலம் கரையேற்ற முயற்சி செய்திருக்க மாட்டார்கள் விஜய்யும் அவர் தந்தை சந்திரசேகரனும்.

    ஷங்கர் இயக்குவதாக கூறப்படும் 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் இப்போது நடிப்பவர் சூர்யா!இந்தப் படம் இந்தியில் அமீர்கான் நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடியது. அமீர் கான் வேடத்தில் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது.
    படப்பிடிப்புக்குக் கிளம்பிய நிலையில், படத்தின் தனது வேடத்துக்காக நிறைய கெட்டப் மாற்ற வேண்டிய நிலை இருந்ததால், அந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என செய்திகள் வெளியாகின.

    இதற்கு விளக்கமளித்த விஜய், இந்தப் படத்தில் நான் இருக்கிறேனா இல்லையா என்பதை படத்தின் தயாரிப்பாளர்தான் சொல்ல வேண்டும் என்றார். உண்மையில் இந்தப் படத்தில் நடிக்க மாட்டேன் என்று விஜய் மறுக்கவில்லை என்றும். திட்டமிட்டு விஜய்யை கழற்றிவிட்டார்கள் என்றும் கூறுகிறது கோலிவுட்.

    ரத்த சரித்திரம் மண்ணைக் கவ்விய நிலையில், வெயிட்டான ஒரு புராஜக்ட் கைவசம் இருப்பதுதான் தனக்கு நல்லது என சூர்யாவும் அவர் தந்தையும் உட்கார்ந்து பேசி, பக்கத்துவீட்டுக்காரரான ஷங்கருக்கு தூது போயுள்ளனர்.


    அந்த நேரம் பார்த்து, விஜன் தனது கெட்டப் மாற்றம் குறித்து ஆயிரம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்துள்ளார். மேலும் முக்கிய இடத்தில் இருப்பவர்களும் இதில் விஜய் நடிப்பதை விரும்பவில்லையாம். படத்தின் தயாரிப்பாளர்களான ஜெமினி புரொடக்ஷன்ஸ் ஏற்கெனவே சன் பிக்ஸர்ஸ் மற்றும் ரெட் ஜெயன்டுடன் நல்ல அண்டர்ஸ்டாண்டிங்கில் உள்ளது. எந்திரன், மன்மதன் அம்பு படங்களின் வெளியீட்டாளர் ஜெமினிதான்.

    மேலும் அடுத்த சன் பிக்ஸர்ஸ், ரெட் ஜெயன்ட் படங்களின் ஹீரோ சூர்யாதான் என்பதையும் நினைவில் கொள்ளவும். ஏற்கெனவே தனக்குப் பிடிக்காத பிஆர்ஓவை, மற்ற கம்பெனிகளிலும் வேலை செய்ய விடாமல் தடுப்பதையே வேலையாகக் கொண்டு செயல்படுகிறார் சூர்யா என்கிறார்கள்.

    இப்போது, 3 இடியட்ஸ் ரீமேக்கில் விஜய்க்கு பதில் சூர்யா நடிப்பார் என்றும், இதுகுறித்து அவரிடம் இயக்குநர் ஷங்கர் பேசி முடிவு செய்துவிட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்துப் பேசிய சூர்யா, “இந்தப் படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் பின்னர் விஜய் நடிப்பதாகக் கூறப்பட்டது.. இப்போது மீண்டும் என்னிடமே வந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

    பூனைக்குட்டி எவ்வளவு நாள்தான் ஒளிந்திருக்க முடியும்… வெளியில் வந்துதானே ஆகணும் என்கிறார் விஜய் மன்ற நிர்வாகி ஒருவர்

    இப்போது புரிகிறதா…சூர்யாவைப் பற்றி .

    வெளிவந்தது 3 இடியட்ஸ் மர்மம்


    3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் படத்தில் இருந்து விஜய்தான் முதலில் விலகினார் என்றார்கள். ஆனால் விஜய் விலகவில்லை
    படத்திலிருந்து அவரை விலக்கிவிட்டார்கள். விலக்கச் சொன்னவர் தமிழக் முதல்வர் என்ற அதிரடியான தகவலை கோடம்பாக்கம் இப்போது மெதுவாகப் பேசத் தொடங்கியள்ளது. திமுக அனுதாபியான விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சி , அதிமுகச் செயலர் ஜெயலிலதாவை உடனடியாக சந்தித்தத்ன் பின்னனியில் விஜய் நீக்கப்பட்டது முக்கியமான காரணம் என நம்பகமான தகவல் கிடைக்கிறது.

    இந்த சந்திப்பின் போது எஸ்.ஏ.சி என்ன கூறினார் என்பதுதான் கோடம்பாக்கத்தில் ஹாட் டாபிக். பலரும் பல விதமாக தகவல்கள் பரப்பினாலும்இ எஸ்.ஏ.சி கூறியது ரொம்பவே பரிதாபத்திற்குரியது என்கிறார்கள். “எங்களை தொடர்ந்து அவமானப்படுத்துகிற முயற்சியில் இறங்கிவிட்டன சில சக்திகள்.


    த்ரி இடியட்ஸ் படத்தில் நடிப்பதற்காக என் மகன் ஹேர் ஸ்டைலை மாற்றிக் கொண்டு ஷூட்டிங் கிளம்ப தயாராக இருந்தார். அந்த கடைசி நேரத்தில்தான் படத்திலிருந்து விஜய் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்கள். வெளியூருக்கு நலத்திட்ட உதவிகளுக்காக செல்லும் விஜய்க்கு போலீஸ் பாதுகாப்பு கூட கொடுக்க மறுக்கிறார்கள்” என்று சொன்னாராம்.

    மேலும் விஜய் ஒரு அரசியல் சக்தியாக உருவாவதை முதல்வர் விரும்பவில்லை என்பதையும் சொல்லிவிட்டு அப்படியே விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதையும் சொல்லி விட்டு வந்திருக்கிறார் என்கிறார்கள்.

    காவலன் பட மித்ராவுக்கு ஏமாற்றம் தந்தாராம் விஜய்


    காவலன் படத்தில் விஜயுடன் இரண்டாவது கதாநாயகியாக நடித்திருக்கும் மித்ரா மலையாளத்திலும் இதே ரோலைத்தான் பண்ணியிருக்கிறார். தமிழ்ப்படத்தில் விஜயுடன் நடிப்பது குறித்து அவர் கூறும்போது, “நானே ஒரு விஜய் ஃபேன்தான்.

    நான் படிக்கும் கல்லூரியில் நிறைய விஜய் ரசிகர்கள் உண்டு. தமிழ்நாட்டில் ரிலிஸ் ஆகும் அதே நேரம் கேரளாவிலும் விஜய் படங்கள் ரிலீஸ் ஆகுது. அப்படீன்னா விஜய் பவர் கேரளாவில் எப்படின்னு பார்த்துக்குங்க” என்று கூறினார். மேலும் கேரளாவில் சூட்டிங் நடந்தபோது விஜயைத் தனது வீட்டுக்கு விரும்பி அழைத்தாரம்.
    ஆனால் தவிர்க்க முடியாத காரணத்தால் விஜய் வரவில்லையாம். எனினும் கவலைப்படாதீங்க மித்ரா. அடுத்த படத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்று கூறினாராம்.

    காவலனுக்காக அமெரிக்கா போன விஜய்!


    காவலன் படத்தின் அறிமுகத்திற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ளார் நடிகர் விஜய். இப்போது சான்பிரான்ஸிஸ்கோவின் பே ஏரியாவில் தங்கியுள்ள அவர், தனது ரசிகர்களைச் சந்திக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.விரைவில் விஜய் - அசின் நடித்த காவலன் திரைக்கு வருகிறது. இந்தப்படம் அமெரிக்காவிலும் ரிலீசாகிறது. படம் குறித்து மக்களிடம் விளம்பரப்படுத்த சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் விஜய்.

    தற்போது சான் பிரான்சிஸ்கோவில் உள்ள அவர், பே ஏரியாவில் வரும் டிசம்பர் 16-ம் தேதி இந்தியன் கல்ச்சுரல் சென்டரில் ரசிகர்களைச் சந்திக்கிறார். அங்கிருந்து கனடாவும் அவர் செல்லக்கூடும் என்று தெரிகிறது.


    இதற்கிடையே, தடையை மீறி இலங்கை போன அசினுடன் விஜய் ஜோடி போட்டுள்ளதைக் கண்டித்து அமெரிக்க வாழ் தமிழர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

    விஜய் வருகைக்காக காத்திருந்த மீடியா!


    இதோ விஜய் இப்போது புறப்பட்டு விட்டார்... இன்னும் சிறிது நேரத்தில் போயஸ் கார்டனில் ஜெயலலிதாவைச் சந்திக்கப் போகிறார் என்றெல்லாம் ரன்னிங் கமெண்டரி ரேஞ்சுக்கு நேற்று முழுக்கத் தகவல் பரவிக் கொண்டே இருந்ததில் பரபரத்து, களைத்து, அலுத்துப் போனார்கள் பத்திரிகையாளர்கள். கிட்டத்தட்ட நள்ளிரவு வரை ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தின் எதிரே காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பினர்.
    காவலன் படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது விஜய்க்கு. பெரும்பாலான திரையரங்குகளை உதயநிதி ஸ்டாலின் மன்மதன் அம்பு படத்துக்காக தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதால், காவலனுக்கு தியேட்டர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    திமுக தரப்பில் தனக்கு வேறு சில பிரச்சினைகளும் வருவதாக விஜய் மனக்குறையுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. (உதயநிதி ஸ்டாலின் தயாரிப்புத் துறைக்கு வர உதவியாக 'குருவி'க்கு கால்ஷீட் கொடுத்தவர் விஜய்தான்!) இந்த நிலையில்தான் விஜய் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார். இதில் பெரும்பாலானோர் தனிக்கட்சித் துவங்கி, ஜெயலலிதாவுடன் சேருமாறு வற்புறுத்தினர்.


    இன்றைய சூழலில் அரசியலுக்கு வருவது தனக்கும் தன் சினிமா எதிர்காலத்துக்கும் சரியாக இருக்கும் என அவர் கருதுவதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் போயஸ் கார்டனுக்கு போய் ஜெயலலிதாவை சந்திப்பார் என்று கூறப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நேற்று நள்ளிரவு வரை, விஜய் வருவார் என்று கூறப்பட்டதால், ஜெயலலிதா வீட்டு முன்பாகக் காத்திருந்தனர் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள். ஆனால் விஜய் வரவில்லை. அதேநேரம், ஜெயலலிதாவுடன் பல்வேறு விஷயங்களை போனிலேயே விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகரன் பேசிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

    விஜய்-உதயநிதி மோதல்


    விஜய்யின் பரபரப்பு அரசியல் பிரவேச பேச்சுகளும், காவலன் ரிலீஸ் செய்திகளும் வெளிவரும் வேலையில் அதன் பின்புலனில் நடந்த விசயங்கள் வெளிவரத்துவங்கியுள்ளது.
    சமீபத்திய தோல்விகளால் துவண்டிருக்கும் விஜய் தன் வெற்றிப்படிக்கட்டை ஆரம்பிக்க பெரிதும் நம்பி இருக்கும் படம் காவலன். ஏற்கனவே சன்பிச்சர்ஸ் வெளியிட்ட வேட்டைகாரன், சுறா இரண்டு படங்களுமே தோல்வியடைந்ததாலும், சன் பிச்சர்ஸுடன் இணக்கமான நிலை இல்லை என்பதாலும் விஜய் காவலனை சன் பிச்சர்ஸ்க்கு கொடுக்க கூடாது என்ற முடிவில்தான் படத்தையே ஆரம்பித்தார்கள்.


    சித்திக்கின் வழக்கமான வேகத்தால் படம் முடிவடைந்து படத்தை ரெட்ஜெயண்டும், கிளவுட் நைன் இரண்டுமே கண்டு கொள்ளவில்லை. இருப்பினும் விஜயின் மாஸ் ஓபணிங்கை நம்பி பெரிய விலைக்க்கு வாங்கி ரிலீஸ் செய்ய திட்டமிட்டார் ஷக்தி சிதம்பரம். இதன் பின்புதான் விஜய்க்கு பிரச்சனைகளே ஆரம்பித்தது.

    படத்தை ரிலீஸ் செய்ய தியேட்டர்கள் அனைத்தும் சென்ற கட்டுரையில் சொன்னது போல் பெரியவர்களின் கையில் மாட்டிக்கொண்டதால் தியேட்டர் இல்லாமல் தவித்தது காவலன். இதற்கு உதவி கேட்க உதயநிதியை நாடி இருக்கிறார் விஜய். காவலன் ரிலீஸ் தேதியை ஒட்டியே உதயநிதி தயாரித்து கமல் நடித்த மன்மதன் அம்பு ரிலீஸும் முடிவு செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. உதயநிதியிடம் காவலனுக்கு தியேட்டர் கேட்க… அவரோ 9 ஆம் தேதி காவலனை ரிலீஸ் செய்து கொள்ளுங்கள், ஆனால் எனக்கு 17 தேதி மன்மதன் அம்பு ரிலீஸ் ஆவதற்கு தியேட்டரை கொடுத்து விடுங்கள் என்று உதயநிதி கேட்டிருக்கிறார்.


    உதயநிதியின் முதல் படம் குருவி, விஜய் என்ற மாஸுடன் தான் தன் தயாரிப்பு துறைக்கு பிள்ளையார் சுழி போட்டார் உதயநிதி. இதன் அடிப்படையில்தான் காவலனுக்கு உதயநிதியிடம் உதவி கேட்டிருக்கிறார் விஜய். ஆனால் உதயநிதியோ… ப்ரண்ட்ஷிப் வேற பிஸினஸ் வேற என்று பதில் சொல்லி விஜய்யை நோகடித்து பதில் சொல்லி இருக்கிறார். விஜய்க்கு காவலனை எளிதில் விட்டு விட முடியாது. காரணம் வரிசையாக 6 படங்கள் கொடுத்து ரசிகர்கள் துவண்டு போய் இருக்கிறார்கள். இனியும் தோல்வி கொடுத்தால் ஓபனிங்க் கிங் இடத்தை இழக்க வேண்டியதாக இருக்கும்.

    அதனால் வேறு வழியில்லாமல் போயஸ்கார்டனுக்கு போக வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். விஜய் இதுவரை எப்போதுமே திமுக அனுதாபியாகவே முன்னிருத்தப்பட்டிக்கிறார். அஜித்தும் அதுபோல் அதிமுக அனுதாபிகவே பார்க்கப்பட்டார். விஜய் திமுக அனுதாபியாக இருந்தாலும் அவரின் தந்தை சந்திரசேகருக்கும் அதிமுகவுக்கு எப்போதும் சிக்கல் இல்லாத நட்பு இருந்து வருகிறது. அதனால் காவலனுக்கு ஆதரவு கேட்டு முதலில் சந்திரசேகர் ஜெயலலிதாவை சந்தித்து பிரச்சனையை எடுத்து சொல்லியதாக தெரிகிறது.

    விஜய் நேற்று போயஸ் கார்டனில் ஜெயலலிதாவை சந்திப்பதாக கூறப்பட்டது. அதன் பின்பு நடந்த அரசியல் நிகழ்வுகள் இன்னும் திரைமறைவிலேயே இருக்கிறது. அடுத்த தேர்தலில் விஜய் தனித்து வருவாரா?? அதிமுகவுக்கு ஆதரவு தருவாரா? எல்லாமே பொருத்திருந்து பார்க்கவேண்டும். எப்படியோ போயஸும் விஜய்யும் நெருங்க ஆரம்பித்து விட்டது கண்கூடாகத் தெரிகிறது.

    விஜய் அரசியலுக்கு வரமாட்டார் - எஸ்.ஏ.சந்திரசேகர்


    நடிகர் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர மாட்டார். அரசியல் மேடைகளிலும் ஏற மாட்டார், என்று விஜய்யி்ன் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சூட்டிங் ஸ்பாட்களை பார்வையிட வந்த டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1982ல் வெளியாகி வெற்றிபெற்ற சட்டம் ஒரு இருட்டறை படத்தை இந்த காலத்துக்கு ஏற்றாற்போல மாற்றி சட்டப்படி குற்றம் என்ற பெயரில் எடுத்து வருகிறேன். முதல் பாதி சென்னையிலும், பின் பாதி காடுகள் நிறைந்த பகுதிகளிலும் காட்சிகள் வருகின்றன. அத‌னால் சூட்டிங் ஸ்பாட்டை தேர்வு செய்வதற்காக வந்துள்ளேன், என்றார்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், எனக்கு காமராஜரைத் தெரியும், காங்கிரசை தெரியாது, எம்.ஜி.ஆரை தெரியும், அ.தி.மு.க.வை தெரியாது. தி.மு.க.வை தெரியும் கலைஞரை தெரியாது. தே.மு.தி.க.வை தெரியும் விஜயகாந்தை தெரியாது. மக்களுக்கு நல்லது செய்யும் தலைவர்களை தெரியும். அவர்கள் இருக்கும் கட்சியை எனக்கு தெரியாது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாகத்தான் சந்தித்தேன். அரசியல் கட்சியில் இணையும் எண்ணம் கிடையாது. ஆனால் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது. அதை நான் மறுக்கவில்லை. மக்களுக்கு நல்லவற்றை செய்யும் கட்சிக்காக வரும் தேர்தலில் பிரச்சாரம் செய்யவும் வாய்ப்புகள் உள்ளது, என்றார்.

    நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா? என்ற கேள்விக்கு, தற்போது விஜய் கண்டிப்பாக நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார். அரசியல் கட்சியும் தொடங்க மாட்டார். அவர் அரசியல் மேடைகளிலும் ஏறமாட்டார். அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக ஜெயிக்க வேண்டும். அதற்கு அஸ்திவாரம் நன்றாக இருக்க வேண்டும். தற்போது அஸ்திவாரம் போட்டு வருகிறேன், என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில், மக்களுக்கு உதவிகள் செய்வதற்காகத்தான் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டது. மக்கள் இயக்கத்தின் மூலம் ஏழைகளுக்கு பல்வேறு உதவிகளை நடிகர் விஜய் செய்து வருகிறார். ரசிகர்களின் திருமண விழாவுக்கு சென்றால்கூட அங்கு ஏழைகளுக்கு ஏதாவது உதவிகள் செய்தால்தான் விஜய் வருவார் என்று கூறிவருகிறேன். இவ்வாறு ஏழைகளுக்கு உதவி செய்வதை ஊக்குவித்து வருகிறேன்,

    Kaavalan||Exclusive Songs||

    Friday, December 10, 2010
    Kavalan Tamil songs

    Movie Name : Kavalan - The Bodyguard
    Year : 2010
    Cast : Ilayathalapathy Vijay, Asin Thottumkal, Vadivelu...
    Music Director : Vidyasagar
    Banner : Ekaveera Creations
    Producer : C Romesh Babu
    Director : Siddique
    Lyrics : Pa Vijay (1), Yugabharathi (2,4), Viveka (3), Kabilan (5)
    Banner: Cinema Paradise
    Released Date: 17|12|2010




    Track list

  • 01.Yaradu - Karthik, Suchitra
    "Download

  • 02.Pattamboochi - KK, Rita
    "Download

  • 03.Step Step - Benny Dayal, Megha
    "Download

  • 04.Sada Sada - Karthik
    "Download

  • 05.Vinnai Kappan - Tipu, Swetha.
    "Download
  • Kaavalan ||Exclusive stills||

    Wednesday, December 8, 2010




































    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog