தொடர் படங்களால் பிஸியான விஜய் Share
Monday, September 20, 2010
தொடர்ந்து அடுத்தடுத்த பல படங்களில் நடித்து வருவதால் நடிகர் விஜய் ரொம்பவே பிஸியாக உள்ளார். ஏற்கனே பல படங்களில் ஒப்பந்தம் ஆகி உள்ள விஜய் தற்போது களவாணி பட இயக்குனர் சற்குணத்தின் புதிய படத்திலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார்.
இந்த படத்தில் விஜய் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளார். போக்கிரிக்கு பின் விஜய் போலீஸ் வேடத்தில் வர இருக்கும் அடுத்த படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காவலன் படத்தில் நடித்து வரும் விஜய், வேலாயுதம் படத்தின் இறுதி கட்ட வேலையையும் ஒருபுறம் கவனித்து வருகிறார். அதன் பிறகு ஷங்கர் இயக்கத்தில் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக்கிலும் நடிக்க உள்ளார். மேலும் சீமானின் பகலவன் படத்திலும் விஜய் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இந்த படங்கள் அனைத்தையும் முடித்த பிறகு சற்குணத்தின் புதிய படத்தின் பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

0 comments: