விஜயுடன் ஒரு நாள்-உற்சாகத்தில் மாணவ-மாணவிகள்
Sunday, September 26, 2010
புதுச்சேரி மாநிலத்தில் SS Music சார்பில் “எனிதிங் பார் விஜய்” என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக செப்டம்பர் 25 புதுச்சேரியில் மாணவ-மாணவிகளைச் சந்தித்து உரையாடவுள்ளார் நடிகர் விஜய்.
இசை, நடனம், பாட்டு, நடிப்பு மற்றும் வேறு துறைகளில் தனித்தன்மை பெற்றவர்களாக இருப்பின், இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு நடிகர் விஜய் கையால் பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
அதுமட்டுமல்லாமல் விஜயுடன் படப்பிடிப்பில் ஒரு நாள் முழுவதும் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.
இந்நிகழ்ச்சி 25 ம் தேதி காலை 9 மணியளவில் புஸ்சி வீதியிலுள்ள ரோஸ்மா திருமணமண்டபத்தில் நடைபெற உள்ளது. மேலும் விபரம் அறிய No: 55, புஸ்சி வீதியில் உள்ள புதுவை மாநில விஜய் தலைமை மன்றத்தை தொடர்பு கொள்ளவும்.
இத்தகவலை விஜய் மன்ற மாநிலத் தலைவரும், புஸ்சி தொகுதி எம்.எல்.ஏ.வுமான புஸ்சி ஆனந்த் தெரிவித்து உள்ளார். ரசிகர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது. நடிகர் விஜய் புதுச்சேரி வருவதையொட்டி அவருக்கு தடபுடலான வரவேற்பை அளிக்க ஆயத்தமாகிவருகின்றனர் புதுச்சேரி விஜய் ரசிகர்கள்.

0 comments: