வெற்றியின் பயணத்தில் விஜயின் 'காவலன்'
Monday, September 27, 2010
பிரபல மலையாள இயக்குனர் சித்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘காவலன் திரைப்படம், விஜயின் அடுத்த படமாக வெளிவரவுள்ளது.
‘காவலன், ‘பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் தமிழ்ப்பதிப்பாகும். சித்திக் ஏற்கனவே விஜயை வைத்து ‘ப்ரெண்ட்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசின் கதாநாயகியாக நடிக்கும் ‘காவலன் படம், ‘தன்னுடைய படம் அல்ல, இயக்குனர் சித்திக்கின் படம் என வழக்கம்போல் விஜய் கூறியுள்ளார். ‘காவலன் சமீபத்தில் வெளிவந்த விஜயின் படங்களை போல் அல்லாது, சித்திக்கின் ‘ப்ரெண்ட்ஸ் படத்தைப் போல் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘கயிறு கட்டி எடுக்கப்பட்ட சண்டை காட்சிகள் எதுவும் இப்படத்தில் இல்லை என்று ஏற்கனவே விஜய் தனது ரசிகர்களுக்கு தெரிவித்திருப்பதால், இப்படத்தில் விஜய் இயல்பாக நடித்திருப்பார் என நம்பலாம். தனது வழக்கமான பாணியை தவிர்த்து விஜய் ‘இயக்குனரின் நடிகராக இப்படத்தில் மாறி, சித்திக் சொன்னபடி மட்டுமே நடித்துள்ளாராம்.
ஆரம்பத்தில் சில விவாதங்கள், சர்ச்சைகள் எழுந்த போதும் விஜய், சித்திக்கின் பணியால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அனைத்தையும் பார்க்கும் போது விஜய்க்கு, ஒரு பெரிய வெற்றி காத்திருப்பது போன்றே தோன்றுகிறது.

0 comments: