• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    வேலாயுதம் ரீமேக் தான் - இயக்குனர் ராஜா பேட்டி

    Saturday, September 11, 2010
    தன் தம்பி ஜெயம் ரவியை வைத்து ராஜா இயக்கிய 5 படங்களும் தமிழில் சூப்பர் ஹிட். இதுவரை ரீமேக் செய்வதில் ராஜா ராஜாதான் என நிரூபித்து வந்தார். இப்போது ராஜாவின் அடுத்த ரீமேக் விஜய் நடிக்கும் வேலாயுதம். வேலாயுதம் தெலுங்கு படமான ‘ஆசாத்’ படத்தின் ரீமேக். பத்து ஆண்டுகளுக்கு முன்பு நாகர்ஜூன், சௌந்தர்யா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் நடித்து தெலுங்கில் ஹிட்டான படம் ‘ஆசாத்’.


    விஜய்யின் முந்தையப் படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக ‘வேலாயுதம்’ அமையும் என்று திரைவட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக வேலாயுதம் படத்தின் சிறப்பான சில விஷயங்களை வெளிச்சப்படுத்தினார் இயக்குனர் ராஜா.
    விஜய்-ஜெனிலியா நடிப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது வேலாயுதம். படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு ஆந்திராவின் கோல்கொண்டாவில் எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடுத்தக் கட்டப் படப்பிடிப்புக்கான இடத்தினையும் ஆந்திராவிலேயே தேடிவருகிறார்கள்.


    இந்தப் படத்தின் தழுவலான வேலாயுதம் பற்றிய பரபரப்பான கேள்விகளுக்கு விறுவிறுப்பாக பதிலளித்தார் ராஜா.


    'ஆசாத்' விஜய்க்கான படமாக உருவானது எப்படி?


    2 வருசத்துக்கு முன்பே ஆசாத் படத்தின் கதையை விஜய்யிடம் சொன்னேன். அதற்கு அவர், “கதை ஓ.கே. ஆனால் இப்போ உள்ள ட்ரெண்டுக்கு ஏற்ற மாதிரி இருந்தா படம் பண்ணலாம்” என்றார்.


    ஆசாத் கதை மட்டுமே எடுத்துக் கொண்டு விஜய்க்கு ஏற்றாற் போல் வேலாயுதம் திரைக்கதையை உருவாக்கினேன். இதை ரீமேக் என்றும் சொல்ல முடியாது.ரொம்ப வருஷத்துக்கு முன்பு வெளிவந்த படம் என்பதால் அதை அப்படியே ரிமேக் செய்ய முடியாது. இந்த படத்தின் திரைக்கதையை உருவாக்க 4 மாதங்கள் எடுத்துக் கொண்டேன். இதுவரை வந்த விஜய் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட படமா இது இருக்கும்.


    விஜய்யின் முந்தைய 5 படங்களும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்ற நிலையில், தற்போது இந்தப் படம் அந்த எதிர்பார்ப்பை நிறைவேற்றுமா?


    ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றி, இந்தப் படத்தை ஹிட்டாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு தரப்பட்டுள்ளதாக நான் உணர்கிறேன். அந்த வகையில் நிச்சயம் வேலாயுதம் ஹிட் படமா அமையும் என்ற நம்பிக்கை இருக்கு.

    சமீபகால விஜய் படங்களில் ஆரம்பக் காட்சிகளிலேயே ஒரு பெரிய மாஸ்சோடு வருவார். ஆனால் இதில் அப்படி இல்லை. இயல்பான கிராமத்து இளைஞனாக முதல் பாதியில் வருவார். இரண்டாம் பாதியில் அவர்தான் ஹீரோ என்று அவருக்கே தெரியாது. அவர் எதார்த்தமாக செய்யும் எல்லா விஷயங்களுமே அவரை ஹீரோவாக்கிவிடும்.
    அதே நேரம், நகரத்தில் நடக்கும் அநியாயங்களை அழிக்கும் அவதாரமாக ஒரு மாஸ் ஹீரோவாகவும் கலக்குவார். பஞ்ச் வசனங்கள் எல்லாம் இதில் இல்லை.
    பாடல்களில் கூட விஜய்யின் ஸ்டைலுக்கு ஏற்ற மாதிரியான புதுமைகளை சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி.


    படத்தின் நாயகிகளை பற்றி?


    இந்தப் படத்தில் ஜெனிலியா, எப்போதும் ஒரு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடிச்சுட்டு வராங்க. ஆசாத் படத்தில் சௌந்தர்யா அருமையாக நடிச்சிருப்பாங்க. அதே அளவிற்கு திறமையான நடிப்பை ஜெனிலியாவும் வெளிப்படுத்துராங்க. படத்தின் பல பிளஸ்களில் விஜய், ஜெனிலியா இடையேயான கெமிஸ்ட்ரி ஸ்பெசல் பிளஸ்.


    தெலுங்கில் ஷில்பா ஷெட்டி நடித்த கதாபாத்திரத்தில் தமிழில் புதுமுகம் ஹன்சிகா நடிக்கிறார். விஜய்க்கு தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார், அவருக்கும் படத்தில் நல்ல கதாபாத்திரம்.


    அப்ப விஜயின் நெஞ்சுக்குள் குடியிருக்கும் ரசிகர்களுக்கு நல்ல வேட்டைதான்...

    0 comments:

    Post a Comment

    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog