காவலன் படத்தை நம்பும் விஜய்
Friday, September 24, 2010
விஜய்யின் 51-வது படமாக உருவாகி வருகிறது காவலன். சித்திக் இயக்கத்தில் 80 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. பாடல் காட்சிகள் ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட உள்ளன. இந்தப் படக் குழு சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தது.
விஜய் பேசியதாவது: இந்தப் படத்துக்கு தலைப்பு வைப்பதில்தான் நிறைய சிக்கல் இருந்தது. கதைக்கு ஏற்ற தலைப்பு தேவைப்பட்டது. காவல்காரன் பொருத்தமாக இருந்த போதிலும், அதை பயன்படுத்துவதில் சில சிக்கல்கள் இருந்தன.
இப்போது காவலன் ஆகியிருக்கிறது. கதைக்கு மிகவும் பொருத்தமான தலைப்பு. அழகான காதல் கதை. அசின், வடிவேலு, சித்திக் என என்னுடைய ஹிட் கூட்டணி இதில் அமைந்திருக்கிறது. சித்திக் இயக்கத்தில் ப்ரண்ட்ஸ் படம் வெற்றி பெற்றதைப் போல் இந்தப் படமும் வெற்றி பெறும் என்றார்.
விஜய்யுடன் இரண்டு படங்களில் நடித்து விட்டேன். இரண்டுமே ஹிட். இப்போது ஹாட்ரிக் வெற்றி கொடுப்பதற்காக விஜய்யுடன் சேர்ந்திருக்கிறேன். இது நிச்சயம் ஒரு கமர்ஷியல் ஹிட்டாக இருக்கும் என்றார் அசின்.
0 comments: