என் ஸ்டைலில் இருந்து மாறுபட்டதாக இருக்கும் : விஜய்!
Monday, September 20, 2010
ஏகவீரா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படம், ‘காவலன்’. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது. விஜய், அசின், வடிவேலு, ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம், தயாரிப்பாளர் சி.ரோமேஷ்பாபு, இயக்குனர் சித்திக் கலந்து கொண்டனர். நிருபர்களிடம் விஜய் கூறியதாவது: இந்த படத்துக்கு ‘காவல்காரன்’ என்றும், ‘காவல் காதல்’ என்றும் யார், யாரோ பெயர் சூட்டியிருந்தனர். டைட்டிலுக்கு பிரச்னை என்றெல்லாம் சொன்னார்கள். அது தவறு. ‘காவலன்’ என்பதே பொருத்தமான டைட்டில். அதையே வைத்துள்ளோம். ‘சிவகாசி’, ‘போக்கிரி’ படங்களுக்கு பிறகு அசினுடன் சேர்ந்து நடிப்பது சந்தோஷம். திடீரென்று பாலிவுட்டுக்கு சென்ற அவரை, மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்திருக்கிறோம்.
சித்திக் டைரக்ஷனில் நானும், வடிவேலுவும் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தில் நடித்தோம். இப்போது இந்த படத்தில் நடிக்கிறோம். டயலாக் காமெடி, ஆக்ஷன் காமெடி என, ‘ப்ரண்ட்ஸ்’ படத்துக்கு நிகராக இப்படம் இருக்கும். காமெடி கலந்த காதல் கதை என்றாலும், அதிரடி ஆக்ஷனுக்கும் முக்கியத்துவம் உண்டு. சித்திக்கிடம் மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்ட கதை இது. தமிழில் உருவாக்க திட்டமிட்டோம். ஆனால், மலையாளத்தில் ‘பாடிகார்ட்’ பெயரில் உருவாக்கினார். அதை தமிழில் ரீமேக் செய்கிறோம். எனது வழக்கமான பார்முலாவில் இருந்து மாறுபட்ட படம். ‘காவலன்’, ‘வேலாயுதம்’ படங்களுக்கு பிறகு சீமான் இயக்கத்தில் நடிக்க கதை கேட்டுள்ளேன்.

0 comments: