விஐயின் பிராக்டிகல்!!
Saturday, September 25, 2010
வெயில் வந்தா பகலு, லைட்டு போட்டா நைட்டுன்னு ஒரு சவசவ வாழ்க்கையை சில ஹீரோக்கள் அனுபவித்துக் கொண்டிருக்க, ஒவ்வொரு மணித்துளியையும் லட்சங்களாக்கிக் கொண்டிருக்கிறார் விஜய்.
நோ ரெஸ்ட். அடுத்தடுத்த படங்களுக்கு கதை கேட்பதிலும் அது பிடித்திருந்தால் சம்பளம் பேசி லாக்கரை நிரப்பிக் கொள்வதுமாக ரொம்பவே பிராக்டிகல்! இத இத இத இததான் எதிர்பார்க்கிறார்கள் அவரது ரசிகர்களும்.
விஜய்யின் லேட்டஸ்ட் கமிட்மென்ட் என்ன தெரியுமா? விக்ரம் குமார் இயக்கும் படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கிப் போட்டிருப்பதுதான். யாவரும் நலம் என்ற படத்தையடுத்து தமிழில் ஒரு சிறப்பான படத்தை இயக்க வேண்டும் என்று துடியாய் துடிக்கிறார் இந்த விக்ரம். இவருக்கு தோதாக வந்து சிக்கினார் சீயான் விக்ரம். இருவரும் இணைந்து 24 என்ற படத்தை உருவாக்க திட்டமிட்டார்கள். இதில் என்ன ஏழரையோ? புராஜக்ட்டின் துவக்க நிலையிலேயே கட்டை குறுக்கே விழுந்து திட்டமே பணால்.
இந்த நிலையில்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினத்திற்காக ஒரு படத்தில் நடிக்க சம்மதித்திருந்தார் விஜய். அவர் அனுப்பி முதலில் கதை கேட்ட விஜய் பிடிக்கல என்று அனுப்பிவிட்டார். அதன் பின் வேறு கதையோடு சில தினங்களுக்கு முன் வந்து அசத்தினாராம் விக்ரம் குமார். முழுக்க முழுக்க திருப்தியான விஜய் ரத்னம் தரப்பிலிருந்து அட்வான்சும் வாங்கிக் கொண்டார். இதுதான் துவக்க நிலை என்றாலும் பி.சி.ஸ்ரீராம் இப்படத்தை ஒளிப்பதிவு செய்ய வேண்டும் என்று அனைவரும் கூடி முடிவெடுத்திருக்கிறார்கள். அவரும் சம்மதித்திருக்கிறாராம்.
வேலாயுதத்தை தொடர்ந்து திரைக்கு வரப்போகிற விஜய் படம் இதுவேதான்!
0 comments: