• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    விஜய்யுடன் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது : தமன்னா

    Saturday, March 20, 2010


    தமன்னா... இன்றைய தேதியில் தமிழின் நெ.ஒன் நடிகை. இதைச் சொன்னால் அப்படியா என்று அப்பாவியாக முகம் மலர்கிறது.
    தனுஷ், சூர்யா, பரத், கார்த்தி, ஜெயம் ரவி இப்போது விஜய் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். இவரைப் பற்றிய லேட்டஸ்ட் வதந்தி, அதிகமாக சம்பளம் கேட்கிறார். புகழ்ச்சிக்கு மட்டுமல்ல இந்த புறணிக்கும் பொறுமையாகவே பதில் வருகிறது தமன்னாவிடமிருந்து.

    இப்போது நடித்துவரும் படங்கள்?

    ஜெயம் ரவியுடன் தில்லாலங்கடி என்ற படத்தில் நடிக்கிறேன். படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தெலுங்கில் சூப்பர் ஹிட்டான கிக் படத்தின் ‌ரீமேக்தான் இது. ஜெயம் ராஜா இயக்கியிருக்கிறார். ஒரு பாடல் காட்சியை புதுமையாக எடுத்திருக்கிறார்கள். ஷோபி மாஸ்ட‌ரின் கோ‌ரியோகிராஃபியில் நானே என்னுடைய நடனத்தை புதிதாக உணர்ந்தேன்.

    இதுதவிர விஜய்யுடன் சுறாவில் நடித்து வருகிறேன். விஜய் எனக்குப் பிடித்த நடிகர். சின்சியர் வொர்க்கர். அவருடைய காம்பினேஷனில் நடிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    சுறாவில் உங்களுக்கு என்ன மாதி‌ரியான வேடம்?

    சிட்டி கேர்ள். இப்போதைக்கு இவ்வளவுதான் சொல்ல முடியும். படம் பார்த்து தெ‌‌ரிந்து கொள்ளுங்கள்.

    நாலு படம் நடித்ததும் இந்திப் பக்கம் ஒதுங்குவதுதான் இப்போது பேஷன். நீங்கள் எப்படி?

    தமிழில் எனக்கு என்று ஒரு இடம் இப்போது இருக்கிறது. முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து வருகிறேன். அதனால் இந்தியில் நடிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

    ஒருவேளை வாய்ப்பு வந்தால்...?

    கதை நன்றாக இருந்தால், யோசிக்கவே மாட்டேன், கண்டிப்பாக நடிப்பேன்.

    0 comments:

    Post a Comment

    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog