• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    N.K.Ekhambaram(camera man) interview to Dinakaran about Sura highlight

    Sunday, April 11, 2010
    ஷூட்டிங் அனுபவம்?

    பத்து வருடத்துக்கு முன் ‘தமிழன்’ படம் மூலம் என்னை ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தியவர் விஜய். அதன் பின் தமிழ் தவிர இந்தி, தெலுங்கு உட்பட 10 படங்களில் பணியாற்றினேன். ‘சுறா’வில் பணியாற்றியது பெரிய சந்தோஷம். அதற்கு காரணம் இது சன் பிக்சர்ஸ் வெளியிடும் படம். அதே போல விஜய்யின் 50 வதுபடம். இப்படத்தின் ஓபனிங் பாடல் தனுஷ்கோடியில் படமாக்கப்பட்டது. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு லாரியில்தான் செல்ல வேண்டும். மொத்தம் 150 நடன கலைஞர்கள். யூனிட் முழுவதும் 15 லாரிகளில் வருவார்கள். இது புது அனுபவமாக இருந்தது. ‘மீனவ நண்பன்’ படத்தில் எம்.ஜி.ஆர். நடித்த பாடல் காட்சி பாணியில் இப்பாடல் பிரமாதமாக வந்திருக்கிறது.

    ஹை ஸ்பீட் கேமராவை பயன்படுத்தினீர்களாமே?
    இதில் இடம்பெறும் சண்டை காட்சியில் நிறைய புதுமை இருக்கிறது. கிளைமாக்ஸ் சண்டை காட்சி தூத்துக்குடியில் படமாக்கப்பட்டது. நடுக்கடலில் நள்ளிரவு 2 மணிக்கு படப்பிடிப்பு நடக்கும். இது ரிஸ்க்காக இருந்தது. கரையிலிருந்து 8 கி.மீட்டர் தூரத்தில் கடலுக்குள் செல்ல வேண்டும். 50 பேர் கொண்ட குழுவினரும், கேமராவும் சென்ற ஒரு படகு அலையில சிக்கிக்கொண்டது. என்ன நடக்குமோ என்று தவித்துக்கொண்டிருந்தவர்களை மற்றொரு படகில் சென்றுதான் மீட்க முடிந்தது. கனல் கண்ணன் சண்டை காட்சிகள் அமைத்திருந்தார். இந்த காட்சிக்காக பாங்காக்கிலிருந்து ஸ்டண்ட் கலைஞர்கள் வந்திருந்தனர். அவர்களுடன் விஜய் மோதும் இந்த சண்டைக் காட்சி த்ரில்லாக இருக்கும். ஒரு நொடிக்கு 500 பிரேம்களை படம¢ பிடிக்கும் ஹை ஸ்பீட் கேமராவை இதில் பயன்படுத்த¤னோம்.



    பாடல் காட்சியில் புதுமை?

    வழக்கமாக கிளைமாக்ஸ் சண்டை காட்சிக்குதான் ஹெலிகாப்டரை பயன்படுத்துவார்கள். இதில் பாடல் காட்சிக்கு பயன்படுத்தினோம். எல்லா காட்சிகளும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என¢பதில் தீர்மானமாக இருந்தோம். ஒரு பாடல் காட்சியை ஹெலிகாப்டரிலிருந்து படமாக்கினேன். பாடலுக்காகவும் படமாக்கிய விதத்துக்காகவும் இது ரசிகர்களிடம் வரவேற்பை பெறும். ‘அதிரடி அதிரடி’ என்ற பாடல் காட்சி நியூசிலாந்தில் படமாக்கப்பட்டது. இப்பாடலுக்கான நடனத்தை ஸ்டுடியோ அரங்கிற்குள் மட்டுமே படமாக்க முடியும். அந்தளவுக்கு கடினமான நடன அசைவுகள் இருந்தது. ஆனால் தார் சாலையில் அந்த நடன அசைவுகளை செய்து விஜய் வியப்பில் ஆழ்த்தினார்.
    சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ படத்தின் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம். ‘ஆக்ஷன் காட்சிகளுக்கு நவீன ரக கேமரா பயன்படுத்தியுள்ளோம்’ என்கிறார்.

    சவாலாக அமைந்த காட்சி?

    ஆக்ஷன் படத்தில் ஒளிப்பதிவாளருக்கு நிறைய வேலை இருக்கும். திறமைகளை வெளிக்காட்டவும் நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த விதத்தில் ‘சுறா’ எனக்கு பெயர் தரப்போகும் படம் எனலாம். புதுச்சேரியில் குடிசை பகுதி அரங்குகள் அமைத்தோம். இங்கு ஒரு மாதம் நள்ளிரவில் மட்டுமே ஷூட்டிங் நடக்கும். அந்த காட்சிகளும் அதில் பயன்படுத்திய லைட்டிங்கும் பேசப்படும். இப்படி படத்தில் பல சவாலான காட்சிகளை படமாக்கியுள்ளோம்.

    0 comments:

    Post a Comment

    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog