விஜய்யின் புதிய படம் காவல்காரன்! - காரைக்குடியில் துவங்கியது ஷ§ட்டிங்
Thursday, April 8, 2010
விஜய்யின் 51 வது படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜாவா, சித்திக்கா என்ற பெரும் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது. இன்று (ஏப்ரல் 5) காரைக்குடியில் தனது படப்பிடிப்பை துவங்கிவிட்டார் சித்திக். விஜய் நடிக்கும் இந்த படத்தின் பெயர் காவல் காரன்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பட டைட்டில்களை வைத்த எந்த படமும் ஓடியதில்லை என்ற சென்ட்டிமென்ட்டை முதன்முறையாக தகர்த்த படம் ஆயிரத்தில் ஒருவன்தான். அதற்கு முன்பு வந்த படங்கள் எதுவும் பெரிய வசூலை சந்தித்ததில்லை. தமிழில் பெரிய வசூல் இல்லையென்றாலும் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்ட 'யுகானிக்கு ஒக்கடு' என்ற ஆயிரத்தில் ஒருவன் பெரிய ஹிட்!ஒருவேளை அதை நினைத்து காவல் காரன் என்று பெயர் வைத்திருப்பார்களோ என்னவோ?
பணக்கார அசினுக்கு பாடிகார்டாக வேலைக்கு சேருகிற விஜய், எப்படி அசினை கவர்கிறார் என்பதுதான் கதை. ஆனால் படத்தில் வேறொரு பெண்ணை கைப்பிடிப்பாராம் விஜய். அந்த தம்பதிகளுக்கு ஒரு குழந்தையும் பிறப்பதாக போகிறது படம். க்ளைமாக்சில் பத்து வயது மகனுக்கு அப்பாவாகவும் நடிக்கிறாராம் விஜய். (பெரிய மனசுங்ணா..)
சித்திக் தமிழில் இயக்கும் படங்களில் வடிவேலு நிச்சயம் இருப்பாரல்லவா? காவல் காரனிலும் வைகைப்புயல் உண்டு. அசினை கண்காணிக்கிற கேரக்டரில் விஜய். விஜய்யை கண்காணிக்கிற கேரக்டரில் வடிவேலு. இவர்கள் போக ஒரு மிக முக்கிய கேரக்டரில் நடிக்கிறார் ராஜ்கிரண். அசினின் அப்பா இவரேதானாம்!
0 comments: