சுறா பாடல்களில் புதுமை
Tuesday, April 6, 2010
சன் பிக்சர்ஸ் வழங்கும் ‘சுறா’ படம் மூலம் விஜய்&மணிசர்மா கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. ‘எல்லா பாடல்களிலும் மெலடி இருக்கும். அதுதான் ‘சுறா’ பட பாடல்களின் சிறப்பு’ என்கிறார் மணிசர்மா.
விஜய் கூட்டணி பற்றி?
‘ஷாஜகான்’ பட பாடல்களை இப்போதும் பலர் டிவியில் பார்த்து ரச¤க்கின்றனர். உடனே எனக்கு போன் செய்து ப...ாராட்டுகின்றனர். அதே போல ‘யூத்’ படத்தில் இடம்பெற்ற ‘சக்கரை நிலவே’ பாடல் இன்றும் பிரபலம். தொடர்ந்து ‘போக்கிரி’, இப்போது ‘சுறா’. எனக்கும் விஜய்க்கும் இடையே நல்ல புரிதல் இருக்கிறது. அது ‘சுறா’ பட பாடல்கள் சிறப்பாக வர உதவியுள்ளது.
இதில் என்ன புதுமை செய்திருக்கிறீர்கள்?
வழக்கமாக விஜய் படங்களில் குத்து பாடலுக்கு முக்கியத்துவம் இருக்கும். இதில் அது இல்லை. ஒரே ஒரு குத்து பாடல்தான். மற்ற அனைத்து பாடல்களிலுமே மெலடிதான் தலைகாட்டும். வழக்கமாக அவர் படங்களில் இருக்கும் ஓப்பனிங் பாடலும் இல்லை. அதற்கு பதிலாக, ‘வெற்றிக்கொடி ஏத்து’ என்ற பாடல் உள்ளது. தீம் பாடலாக ‘தமிழன், வீர தமிழன்’ என்ற பாடலும் உள்ளது. இந்த இரண்டிலும் கூட மெலடி வாசம் அதிகமாக இருக்கும்.
இந்த மாற்றத்துக்கு காரணம்?
சினிமாவில் மாற்றத்தை ரசிகர்கள் எப்போதும் விரும்புவார்கள். இது போல வித்தியாசமான வகையில் இசையை தந்தால்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும். இது போல மாற்றத்துக்கு விஜய்யும் இயக்குனர் எஸ்.பி.ராஜகுமாரும்தான் காரணம்.
பின்னணி இசை
படத்தில் பல சுவையான, சுவாரஸ்யமான காட்சிகள் வருகின்றன. அதற்கேற்ப பின்னணி இசை இருக்கும். விஜய்யின் ஒவ்வொரு படத்துக்கு பின்னணி இசை அமைக்கும்போதும் அவர் என் ஸ்டுடியோவுக்கு வருவார். இந்த படத்துக்கும் வந்தார். பின்னணி இசையை கேட்டவர், என்னை கட்டித் தழுவி பாராட்டினார்.
0 comments: