விஜய் கொடுத்த வாய்ப்பு : தட்டிக்கழித்த இயக்குனர்கள்!
Wednesday, April 7, 2010
பாலிவுட்டில் சக்கை போடு போட்ட த்ரி இடியட்ஸ் படத்தை தமிழில் ரீமேக்கப் போகிறார்கள். இதில் நடிக்க முதலில் ஓகே சொன்னவர் சிறிது காலமாக 'அடிதடி, ஆக்ஷன்' மீது மட்டுமே நம்பிக்கை வைத்திருக்கிற விஜய்.
இந்த மாற்றம் கோலிவுட்டில் குஷியை கிளப்பிவிட, விஜய் சொன்ன டைரக்டர்கள் லிஸ்ட் இருக்கிறதே... அது கஜினி முகமதுகளின் கவலையை போக்கிய கம்பீர லிஸ்ட்.
சூப்பர் ஹிட் கொடுத்த டைரக்டர்களாக இருந்தாலும் கூட, தொடர் வெற்றி இல்லையென்றால் பேக்கப் சொல்லிவிடுகிற காலம் இது. இதில் தரணி, விஷ்ணுவர்த்தன் போன்ற பிரபல இயக்குனர்களுக்கும் கூட பிரச்சனை. இந்த நேரத்தில்தான் தான் நடிக்க விரும்பும் த்ரி இடியட்ஸ் படத்திற்கு இவ்விரு இயக்குனர்களையும் சிபாரிசு செய்தாராம் விஜய்.
ஆனால் இந்த வாய்ப்பை ஒப்புக் கொள்ள முடியாதளவுக்கு இரண்டு பேருக்குமே இழுபறி. என்னவாம்? தெலுங்கில் 35 கோடி பட்ஜெட்டில் ஒரு படத்தை இயக்கி வருகிறாராம் தரணி. இந்த நேரத்தில் நம்மால் முடியாது என்று அவர் ஒதுங்கிக் கொண்டாராம். விஷ்ணுவின் பிரச்சனை வேறு மாதிரி. இவர் கேட்ட சம்பளம் தயாரிப்பாளர்களுக்கு ஆகவில்லை. எனவே விஜய்யின் சாய்ஸ் வேறு யாரை நோக்கி?
கோடம்பாக்கமே ஆவலோடு காத்திருக்கிறது. அதிலும், ஹிட் ப்ளாப் என்று மாறி மாறி படகேறிய பல இயக்குனர்கள் காத்திருக்கிறார்கள். நல்ல பதிலா சொல்லுங்ணா....
0 comments: