வித்தியாசமான கெட்டப்பில் விஜய்!
Saturday, June 26, 2010
விஜய் ரசிகர்களுக்கு மட்டுமல்ல எல்லா ரசிகர்களுக்குமே இனிப்பான செய்தி இது. “வேலாயுதம்” படத்தில் கெட்டப் மாற்றி நடிக்க முடிவு செய்துள்ளார் இளைய தளபதி.
ஒரே மாதிரி நடிக்கிறாரு, ஹேர் ஸ்டைல்கூட மாற்றி நடிப்பதில்லை… என விஜய் மீதான விமர்சனங்கள் பல. கடைசியாக வெளிவந்த “சுறா” வும் விஜய்யை யோசிக்க வைக்க, வேலாயுதத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிப்பதென்று முடிவெடுத்துள்ளாராம்.
ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரிப்பில் ஜெயம்ராஜா இயக்கும் அப்படத்தில் கெட்டப் மாற்றி நடிக்குமளவிற்கு கதை அமையவில்லை என்றாலும் சில காட்சிகளில் கெட்டப் மாற்றி நடிப்பதுபோன்று ஸ்கிரிப்டை மாற்றி அமைக்கச்சொல்லி ராஜாவிடம் கேட்டுள்ளாராம் விஜய்.
சமீபத்தில் இதற்கான போட்டோ ஷூட் நடந்தபோதுகூட ஒரே மாதிரி கெட்டப்பில்தான் போஸ் கொடுத்தாராம் விஜய். படத்தில் வரும் அந்த கெட்டப் மாற்றத்தை விளம்பரப்படுத்தவேண்டாம் என்றும் சொல்லியுள்ளாராம் விஜய்.
0 comments: