விஜய் வழியில் ஜெய்
Thursday, June 17, 2010
அசப்பில் விஜய் போலவே இருக்கிறார் ஜெய். அவரது பேச்சும், நடிப்பும், மாடுலேஷனும் கூட விஜய் போலவே இருக்கிறது. அவரது லட்சியமும், அதற்காக அவர் போடும் ரூட்டும் கூட விஜய்யையே பிரதிபலிக்கிறது.
இவரை அடையாளம் காட்டிய படம் பகவதி.படத்தில் விஜய்யின் தம்பியாக சினிமாவில் அறிமுகமானவர் ஜெய். சென்னை 28. இன்னொரு படம் கோவா. இரண்டுமே வெங்கட்பிரபு இயக்கியவை.
விஜய்யை போல ஆக்சன் ஹீரோவாக வேண்டும் என்பதுதான் இவரது ஆசை. அதற்காக விஜய்க்கு கமர்ஷியல் பிரேக் கொடுத்த இயக்குனர்களாக தேடிப் போய் கால்ஷீட் கொடுக்கிறார்.
இப்போதைக்கு இவரது டார்கெட் திருத்தணி படத்தில் பரத்தை இயக்கிவரும் பேரரசு. திருப்பாச்சி, சிவகாசி மாதிரி ஒரு ஹிட் நமக்கும் கொடுப்பார் என்ற நம்பிக்கையில் பேரரசை சுற்றி வருகிறார் ஜெய்.
இந்த புதிய பாதை வெற்றிப் பாதையாக அமையுமா?
0 comments: