ரிப்போர்டராக மாறிய ஜெனிலியா…
Monday, June 21, 2010
வேலாயுதம் படத்தில் பத்திரிகை நிருபராக நடிக்கிறார் ஜெனிலியா. இது தெலுங்கில் சௌந்தர்யா நடித்த வேடம் என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கில் நாகார்ஜுன், சௌந்தர்யா, ஷில்பா ஷெட்டி நடித்த ஆஸாத் படத்தைதான் தமிழுக்கேற்ப மாற்றி வேலாயுதமாக எடுக்கின்றனர். இதில் நாகார்ஜுன் வேடத்தில் விஜய்யும், சௌந்தர்யா நடித்த வேடத்தில் ஜெனிலியாவும் நடிக்கின்றனர். சௌந்தர்யா ஆஸாத்தில் பத்திரிகை நிருபராக நடித்திருந்தார். ஷில்பா ஷெட்டி நடித்த வேடத்தை தமிழில் செய்பவர் ஹன்சிகா மோத்வானி.
இவர்கள் தவிர சரண்யா மோகனும் வேலாயுதத்தில் நடிக்கிறார். இவர் விஜய்யின் தங்கையாக நடிக்கிறார். ப்ரியன் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இவர் ஒளிப்பதிவு செய்யும் முதல் விஜய் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments: