நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறார் விஜய்
Saturday, August 21, 2010
முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்குப் படத்தில் நடிக்கப் போகிறாராம் விஜய். அது த்ரீ இடியட்ஸின் தெலுங்கு ரீமேக். ஷங்கர் இயக்கவிருப்பதாகச் சொல்லப்படும் இந்தப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் விஜய், ஆர்யா மற்றும் ஜீவா நடிக்கின்றனர். தெலுங்கில் விஜய் பாத்திரத்தில் மகேஷ்பாபு நடிப்பார் என்று முதலில் சொல்லப்பட்டது.
ஆனால், தெலுங்கிலும் விஜய்யே நடித்தால் என்ன? என்று அவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தனது முன்னாள் சிஷ்யரான ஷங்கரிடம் (எஸ்ஏசியிடம் உதவி இயக்குநராக இருந்தவர்தான் ஷங்கர்!) கேட்டுள்ளார். சற்று யோசித்த ஷங்கரிடம், இதற்கு முன் விஜய்யின் டப்பிங் படங்கள் சில தெலுங்கில் நன்றாக ஓடியதாக புள்ளி விவரமெல்லாம் சொன்னாராம். இப்போது ஒரு வழியாக விஜய்யை தெலுங்கில் அறிமுகப்படுத்தவும் ஒப்புக் கொண்டாராம் ஷங்கர்!
0 comments: