கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பு: விஜய், இலியானாவை பார்க்க திரண்ட கல்லூரி மாணவர்கள்; அவினாசி சாலையில் பரபரப்பு
Thursday, February 3, 2011
கோவையில் “நண்பன்” சினிமா படப்பிடிப்பில் விஜய்- இலியானாவை பார்ப்பதற்கு கல்லூரி மாணவர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமீர்கான் நடிப்பில் வெளியாகி இந்தியில் ஹிட்டான “3 இடியட்ஸ்” படம் தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.
ஷங்கர் இயக்குகிறார். இதில் அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிக் கிறார். கதாநாயகியாக இலியானாவும், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோரும் நடிக்கின்றனர்.
இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. தொடர்ந்து திருமண ஊர்வலம் மற்றும் பாடல் காட்சியை படமாக்குவதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவை வந்தனர். இன்று காலை 6 மணி முதல் ஊர்வல காட்சி அவினாசி சாலை ஜென்னி கிளப் முன்பு படமாக்கப்பட்டது.
இதில் நடிகர் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ் ஆகியோர் நடித்தனர். மார்வாடி வீட்டு திருமண காட்சி போல பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. காலை 9 மணி வரை ஊர்வல காட்சி படமாக்கப்பட்டதற்கு அருகில் உள்ள கல்லூரியில் உள்ள மாணவ- மாணவியருக்கு “நண்பன்” படப்பிடிப்பு பற்றிய தகவல் பரவியது.
அவர்கள் விஜய், இலியானாவை பார்க்கும் ஆவலில் ஜென்னி கிளப் முன்பு திரண்டனர். நூற்றுக்கணக்கில் மாண வர்கள் முற்றுகையிட்டதால் அங்கு போக்குவரத்து பாதிக் கப்படும் சூழல் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு ஜென்னி கிளப் வளாகத்துக்கு மாற்றப்பட்டது. மாணவர்கள் விஜய், இலியானாவை வாழ்த்தி கோஷமிட்டனர்.
அவர்கள் அங்கு இல்லாத போதும் மாணவர்கள் ஆர்வ கோளாறினால் முண்டி யடித்துக் கொண்டு நின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இன்று மாலையில் திருமண பாடலில் நடிகர் விஜய், இலியானா பங்கேற்று நடனமாவது போன்ற காட்சிகள் படம் பிடிக்கப்படுகிறது. முன்ன தாக நடிகை இலியானா ரெசிடென்சி ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார். படப்பிடிப்பு ஏற்பாடுகளை கோவை பாபு செய்திருந்தார்
0 comments: