• Home
  • Posts RSS
  • Comments RSS
  • Edit
  • ||HOT news by SuJeE||

    ||HOT news by SuJeE||

    விஜய் நடித்தால்தான் 3 இடியட்ஸ் எடுபடும் - ஷங்கர்

    Thursday, February 3, 2011



    ஒரேயொரு வெற்றி, ஆயிரம் தோல்விகளை மறக்க வைக்கும் சக்திமிக்கது என்பார்கள். விஜய் விஷயத்தில் அது நிரூபணமாகி யிருக்கிறது. எக்கச்சக்க சிக்கல்கள், சதிகளைத் தாண்டி வெளியான காவலன் படம் பெற்ற வெற்றி, விஜய்க்கு மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் மரியாதையை ஏற்படுத்தியுள்ளதோடு, கைவிட்டுப் போன பெரிய வாய்ப்பையும் மீண்டும் தேடி வர வைத்திருக்கிறது. இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படமான, ‘3 இடியட்ஸை’ தமிழில் விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்தை வைத்து ரீமேக் செய்ய முடிவு செய்தது ஜெமினி பிலிம் சர்க்யூட். படத்துக்கு, ‘மூவர்’ என்று பெயர் சூட்டவும் முடிவு செய்திருந்தனர். அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிப்பதாக முடிவாக, அதற்காக கெட்டப் மாற்றங்களுக்கும் தயாரானார் விஜய். ஆனால் இயக்குநருடன் பிரச்சினை காரணமாக விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. இன்னொரு பக்கம், இந்தப் படத்தில் விஜய் நடிப்பதை சில முக்கிய சக்திகள் விரும்பவில்லை என்றும், அதனால் நீக்கப்பட்டுவிட்டார் என்றும் கூறினர்.

    விஜய் நடிக்கவில்லை, அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார் என்று ஜெமினி நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்துக்கு ‘ஏழரை’ பிடித்த எஃபெக்ட் வந்துவிட்டது. தன்னைத் தேடி வந்த வாய்ப்பு என்பதால் சூர்யா ரொம்பவே கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டார் போலிருக்கிறது இயக்குநர் ஷங்கரை. ஏகத்துக்கும் கண்டிஷன்கள் போட ஆரம்பித்தார். தெலுங்கிலும் நானே ஹீரோவாக நடிப்பேன் என்று முதல் கண்டிஷன் போட்டார். சரி பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டதால், ஷங்கர் மவுனம் காத்தார்.
    அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக ரூ 8 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா. ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்.
    அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்… மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது சூர்யா ஏழாம் அறிவு, மாற்றான் படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!
    அதற்கு மேல் பொறுமை போயே போச்… ‘விஜய்யுடனே திரும்பப் பேசலாம். அவரை சம்மதிக்க வைக்கலாம். சூர்யாவை வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்’ என்று கூறிவிட்டு, மீண்டும் விஜய்யைத் தொடர்பு கொண்டாராம் ஷங்கர்.

    எடுத்த எடுப்பிலேயே எந்த நிபந்தனையுமில்லாமல் சம்மதம் சொன்ன விஜய், வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் எடுத்து முடிந்ததும் படப்பிடிப்புக்கு ஆஜராகிவிடுவதாகக் கூறிவிட்டார். ஷங்கர், தயாரிப்பாளர், விஜய் ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் எல்லோருக்குமே இப்போது பரம திருப்தி!
    காரணம்… 3 இடியட்ஸ் கதை அப்படி. ஷங்கர் முன்பே சொன்ன மாதிரி, விஜய் போன்ற நடிகர்கள் நடித்தால்தான் இந்த மாதிரி படங்கள் எடுபடும். பார்க்கவும் அம்சமாக இருக்கும்!
    விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இலியானா நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் கடந்த ஜனவரி 25-ம் தேதியே தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

    என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, அப்போது அந்த நண்பனின் நிலை என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார்கள் ஒரிஜினல் ‘3 இடியட்ஸ்’ படத்தில்.
    தமிழுக்கேற்ப ஷங்கர் ஏதாவது மாற்றங்கள் செய்துள்ளாரா என்பது இனிமேல்தான் தெரியும்

    0 comments:

    Post a Comment

    Which is the Vijay's best film?

    Who is the next super star in Tamil cinema

    Who is the best pair with Vijay

    Search This Blog