மறக்க முடியாது படப்பிடிப்பென்றால் அது காவலன்தான் : அசின்
Tuesday, October 19, 2010
சித்திக் இயக்கத்தில் விஜயுடன் நடிக்கும் ‘காவலன்’ படத்தின் படப்பிடிப்பிற்காக சென்னை வந்ததுதான். போகிற இடமெல்லாம் கறுப்புக் கொடி, ஆர்ப்பாட்டம்.
படத்துக்கு செருப்படி என தமிழ் உணர்வாளர்கள் காட்டிய கடும் எதிர்ப்பில் பயத்தில் ஸீட்டு நுனியில் அமர்ந்திருப்பது போலவே எப்போதும் காணப்பட்டார் அசின்.
இந்த பயத்தால் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு படப்பிடிப்பை மாற்றியும் விடாது கறுப்பு எனபதுபோல் அங்கும் போராட்டக்காரர்கள் வருவதாக சொல்லப்பட `எப்போது முடியும் இந்தப் படம், எப்போது மும்பைக்குப் பறக்கலாம்` எனக் காத்திருந்தாராம் அசின்.
ஒருவழியாக கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் காவலன் படப்பிடிப்பு முடிந்தது. இதற்காகவே காத்திருந்ததுபோல் உடனே விஜய், இயக்குநர் சித்திக் உள்ளிட்ட படப்பிடிப்புக் குழுவினரிடம் விடைபெற்றுக் கொண்டு ஹோட்டலுக்குப் புறப்பட்டார் அசின்.
"வாழ்க்கையில் என்னால் மறக்க முடியாது படப்பிடிப்பென்றால் அது காவலன்தான். சந்தோஷம், பதட்டம், பயம் எல்லாமே கலந்த ஷூட்டிங் இதுதான். ஒரு கட்டத்தில் சீக்கிரம் இந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டால் போதும் என்றாகிவிட்டது. ஆனால் விஜய்யும் சித்திக்கும் என்னைப் பார்த்துக் கொண்ட விதம், எனக்கு ஆதரவளித்த விதம் மறக்க முடியாதது" என்றார் அசின்.
இன்னும் ஓரிரு தினங்களில் படத்துக்கான டப்பிங்கையும் தானே பேசும் அசின், அது முடிந்த கையோடு மும்பைக்குப் புறப்படுகிறார்.
0 comments: