3 இடியட்ஸ் புரொஃபசர் சத்யராஜ்!
Wednesday, July 28, 2010
தமிழில் வெளியாகவுள்ள '3 இடியட்ஸ்' படத்தின் புரொஃபசர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார், சத்யராஜ்.
இந்தியில் அமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி ஆகியோர் 3 இடியட்ஸாக நடிக்க, அவர்களது கதாப்பாத்திரத்துக்கு இணையாக பேசப்பட்ட புரொஃபசர் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தினார், போமன் இரானி.
அந்தக் கதாப்பாத்திரத்தில் தமிழில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார், நடிகர் சத்யராஜ்.
முன்னதாக, தமிழில்'3 இடியட்ஸ்' படத்துக்கு விஜய், சிம்பு, மாதவன் ஆகியோரை ஒப்பந்தம் செய்ய பெரிய இழுபறி நீடித்து வந்தது.
சம்பள விஷயத்தில் விஜய் தயங்க... 'ஏற்கெனவே இந்தியில் நடித்த கேரக்டரை தமிழில் நடிக்க மாட்டேன்!' என்று மாதவன் மறுத்தார்.
'என் கேரக்டரை டெவலப் பண்ணினால்தான் நடிப்பேன்...' என்று சிம்புவும் பிகு பண்ண... அனைத்தையும் சரிசெய்யும் விதமாக ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படத்தை எடுக்கிறார்கள்.
இரண்டிலும் மாதவன், சிம்பு நடிக்க... தமிழில் விஜய் நடிக்கும் கேரக்டரில் தெலுங்கில் மகேஷ்பாபு நடிக்கிறார்.
இயக்குநர் ஷங்கர், விஜய், மகேஷ் பாபு மூவருக்கும் தலா 10 கோடி சம்பளமாம். படத்தின் மொத்த பட்ஜெட் 90 கோடியாமே!
0 comments: