புது கெட்டப்பில் விஜய்!
Saturday, May 29, 2010
ஆவேசமாய் ‘நாம் தமிழர்’ கட்சி ஆரம்பித்திருக்கும் இயக்குனர் சீமான். அரசியல் பணிகளுக்கிடையே ஒரு படத்தை இயக்கவுள்ளார். மிகவும் வலிமை வாய்ந்த கதையாகவும், ஒவ்வொரு தமிழனையும் யோசித்துப் பார்க்க வைக்கும் காட்சிகளுமாக அதிரடியாய் களம் இறங்க இருக்கிறார்.
விஜய்தான் ஹீரோ. விஜய்க்கு இது முக்கியப் படமாக இருக்கும். ஏற்கனவே இப்படி ஒரு கதை இருப்பது விஜய்க்குத் தெரியும். இப்போது வேண்டாமே என்று தள்ளிப்போட்டு வந்திருக்கிறார். அதற்கான நேரம் இப்போது வந்திருக்கிறது. அதனால் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
‘காலைப்புலி’ தாணு தயாரிக்கும் படம் என்றால் பிரம்மாண்டத்துக்கு பஞ்சமே இருக்காது. ‘புது கெட்டப்பில் நடிங்க இளைய தளபதி’ என்று ஓயாமல் கோஷமிட்டு வந்த அவருடைய ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் வித்தியாசமான கெட்டப்பில் குதிக்க இருக்கிறார் விஜய்.
மேலும் படத்தின் வசனம் நெருப்பு போல இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு டைரக்டர் குழுவே வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது
0 comments: